fbpx
Others

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 96-வது பிறந்தநாள்-முதல்வர்மு.க.ஸ்டாலின் மரியாதை.

 நடிகர்திலகம்சிவாஜிகணேசனின்96துபிறந்தநாள்இன்றுகொண்டாடப்படுதையொட்டி,சென்னை அடையாறில்உள்ளஅவரதுமணிமண்டபத்திற்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள சிவாஜி கணேசனின் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.மேலும் சிலைக்கு அருகில் அலங்கரித்துவைக்கப்பட்டுள்ளஅவரதுபுகைப்படத்திற்கும்மலர்தூவிமரியாதைசெலுத்தினார்.முதலமைச்சருடன் அமைச்சர்கள் துரைமுருகன், சாமிநாதன், சென்னை மேயர் பிரியா, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நடிகர்பிரபு,அவரதுமகன்விக்ரம்பிரபுஆகியோர்மலர்தூவிமரியாதைசெலுத்தினார்கள்மணிமண்டபத்திற்குவருகைதந்தமுதலமைச்சர்மு.க.ஸ்டாலினை   நடிகர்பிரபுவரவேற்றார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் பிரபு கூறியதாவது: மூன்று வருடங்களாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து மரியாதை செலுத்தி வருகிறார். அதற்கு என் தந்தை மீது உள்ள பாசம் தான் காரணம். கருணாநிதி , எம்ஜிஆர், சிவாஜி கணேசன் என மூவரின் சிலையும் ஒரே இடத்தில் இருப்பது அவர்களின் ஒற்றுமையை காட்டுகிறது நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கலைமாமணி, பத்மஸ்ரீ, பத்மபூஷன், உள்பட பல விருதுகளை பெற்றுள்ளார். பராசக்தி திரைப்படத்தின் வாயிலாக வெள்ளித்திரையில் அறிமுகம் ஆன சிவாஜி கணேசன் தனது நடிப்பு திறமையால் ரசிகர்களை கட்டிப்போட்டார். இதனால் தான் அவர் மறைந்து 20 வருடங்களை கடந்த பின்னரும் அவரை தலைமுறைகள் தாண்டி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் என்று கூறியுள்ளார்.

 

Related Articles

Back to top button
Close
Close