fbpx
Others

தேனி–DR.அம்பேத்கர் பிறந்த நாள்விழா — சிறப்பு செய்தி..

போடி ஒன்றிய அஇஅதிமுக சார்பில் அம்பேத்கர் 133 வது பிறந்த நாள் விழா

தேனி மாவட்டம் போடி ஒன்றியம் மீனாட்சிபுரம் கிராமத்தில் அம்பேத்கர் பிறந்த நாள் விழா போடி ஒன்றிய அஇஅதிமுக சார்பில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மீனாட்சிபுரம் பேரூராட்சி சேர்மன் திருப்பதி தலைமை தாங்கினார் மேலசொக்கநாதபுரம் பேரூர் கழக செயலாளர் தொட்டப்பன் முன்னிலை வகித்தார். தேனி மாவட்ட அம்மா பேரவை தலைவர் குறிஞ்சிமணி அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் பேரூராட்சி துனை செயலாளர் புகழேந்தி அவைத் தலைவர் முத்துராஜ் ஒன்றிய துணைச் செயலாளர் ராஜ்குமார் ஒன்றிய மாவட்ட பிரதிநிதி கனகராஜ் மீனாட்சிபுரம் பேரூர் கழக அஇஅதிமுக நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.. போடி அருகே மீனாட்சிபுரம் கிராமத்தில் போடி ஒன்றிய அஇஅதிமுக சார்பில் நடைபெற்ற அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் பேரூராட்சி சேர்மன் திருப்பதி தலைமையில் மாவட்ட அம்மா பேரவை தலைவர் குறிஞ்சிமணி அம்பேத்கர் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய போது எடுத்த படம்.

Related Articles

Back to top button
Close
Close