fbpx
Others

தேனி -வேப்பம்பட்டி கிராமம் 96 வயது முதியவர் ராமசாமிக்கு மாவட்ட ஆட்சியர்என்ன பதில்..?

தமிழ்நாடு – தேனி மாவட்டம், வேப்பம்பட்டி கிராமத்தில் நியாயம் வேண்டும் என 18 மாத காலமாக கதறும் 96 வயது முதியவர் ராமசாமியின் நிலத்தை ஆக்கிரமித்து , விற்பனை செய்த அதிகாரிகள் மற்றும் பணபலம் படைத்தோர் , முதியவர் ராமசாமியின் நிலம் அதோகதியா ??? 96 வயது முதியவர் ராமசாமியின் கதறல்கள் இதோ…!   எனது விவசாய நிலம் கிடைக்கும் வரை என் அறவழி போராட்டம் தொடரும் ! எனது உயிருக்கு ஆபத்து, இவர்கள் தான் காரணம்.1) சர்வேயர் ராஜேஷ், இவரது மனைவியும் ஒரு சர்வேயர் என்பது சாபக்கேடு (சுக்கங்கால்பட்டி பிறப்பு, கொடுவிலார்பட்டி இருப்பு) 2) நான் ஒரு அப்பாவி எனும் தோற்றத்தை வெளிக்காட்டி வரும் வேப்பம்பட்டி VAO இந்துஜா  3) உத்தமபாளையம் தாசில்தார் சந்திரசேகரன்,  4) எனது 50 சென்ட் நிலத்தை ஆக்கிரமித்த காவல் துறையில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர் குருசாமி  5) எனது நிலத்தை ஆக்கிரமித்த குருசாமியின் மனைவியின் தங்கையின் மகனான தோட்ட பணியாளர் சீலையம்பட்டி பாலாஜி  6) எனது நிலத்தை விற்பனை செய்தவர் காமாட்சிபுரம் கிராமத்தை சேர்ந்த பாலசுப்ரமணியம் ஆகியோர்…..  தேனி மாவட்டத்தில் பணம் மற்றும் படைபலம் படைத்தவர்கள் தான் வாழ முடியுமா???  சாமானியர்கள் தற்கொலை தான் செய்து கொள்ள வேண்டுமா???  எனது சொந்த இடத்தை மீட்க 18 மாத காலம் தொட்டு இன்றுவரை போராடியும் கிடைக்காத நியாயம்…??? இனிமேலும் கிடைக்குமா ???  மாவட்ட நிர்வாகமே, என்னை வாழ வழி விடுங்கள் !!!  இல்லையேல் நான் சாவதற்கு ,கருணை கொலை செய்திட அனுமதி தாருங்கள் மாவட்ட ஆட்சியரே…!!! என்று புலம்பும் ராமசாமியின் கதிதான் என்ன ? இவற்றை உடனடியாக மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சார்பிலும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் சார்பில் கோரிக்கைவைக்கின்றனர்…….நடவடிக்கைஎடுப்பார்களாமாவட்டஆட்சியர்!!!……. ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புச் செயலாளர், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி….

Related Articles

Back to top button
Close
Close