fbpx
Others

தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு—-சிறப்பு செய்தி

01.07.2023 அன்று ஹோட்டல் ரம்யாஸ் தேனியில் குடும்ப வன்முறை தடுப்புத் திட்டம் மற்றும் ஆரோக்கிய அகம் இணைந்து deputy chief Legal aid defence council system, திரு C. இயேசு ராஜா BA., BL., அவர்கள் தலைமையில் தேனி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு வழக்கறிஞர்களுக்கு குடும்ப வன்முறை தடுப்புச் சட்டம் 2005 என்ற தலைப்பில் வழக்கறிஞர், உயர் நீதிமன்றம் மதுரை கிளை, திரு சவரிராஜ் BA., BL., அவர்களால் பயிற்சி அளிக்கப்பட்டது இதில் பெண்கள் சார்ந்த சட்டங்கள் குறித்தும் இதனால் பெண்களுக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் பற்றியும் பயிற்சி அளிக்கப்பட்டது மேலும் பாதுகாப்பு அலுவலர், ஒருங்கிணைந்த சேவை மையம் இவற்றின் பயன்கள் என்னவென்று எடுத்துரைக்கப்பட்டது இதனால் பெண்கள் எவ்வாறு பாதுகாக்கப்படுகிறார்கள் என்பது குறித்து தெளிவாக பயிற்சி அளிக்கப்பட்டது. இதில் சுமார் 50 வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர். இதில் குடும்ப வன்முறை தடுப்புத் திட்ட ஆற்றுப்படுத்தினர் செல்வி ஸ்வேதா பிரியதர்ஷினி அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள். ஆரோக்கிய அகத்தின் உதவி இயக்குனர் திரு T. V முருகேசன் அவர்கள் நோக்க உரை ஆற்றினார்கள். வன்முறை தடுப்புத் திட்ட களபணியாளர் திருமிகு வைகுண்ட லட்சுமி அவர்கள் நன்றி கூற இப்பயிற்சி நிறைவு பெற்றது.

Related Articles

Back to top button
Close
Close