fbpx
Others

தேனி மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் குழு கூட்டம் ஆட்சியர் தலைமையில்..

தேனி மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் 09/11/2023 இன்று அனைத்துத்துறை தலைவர்களுடன் உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறையின் மாவட்ட அளவிலான வழிகாட்டுதல் குழு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர்,வி.ஷஜீவனா இ.ஆ.ப  தலைமையில், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் Dr. இராகவன் முன்னிலையில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி தயாரிக்கப்படும் உணவுப்பொருட்களின் தரம் குறித்த குறைபாடுகள் கண்டறியப்பட்டால் 9444042322 என்ற எண்ணிற்க்கு நேரடியாக புகார் தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்நிகழ்வில் அனைத்துத்துறை அலுவலர்கள், ஹோட்டல், பேக்கரி சங்க பிரதிநிதிகள், உணவுப்பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனை சங்க பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்ட நிகழ்ச்சி………………………… தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close