fbpx
Others

தேனி மாவட்டம் பெரியகுளம் 75 வது சுதந்திர தின அமுத விழா: செய்தி

பெரியகுளம் விக்டோரியா நினைவு அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டின் 75 வது சுதந்திர தின அமுத விழா:
தேனி மாவட்டம் பெரியகுளத்தில் நூற்றாண்டு பாரம்பரியமிக்க விக்டோரியா நினைவு அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் நாட்டின் 75 வது சுதந்திர தின அமுதவிழா கொண்டாடப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் எஸ் ஜே கோபிநாத் அவர்களது சிறப்பான ஏற்பாட்டின் கீழ் நடைபெற்ற இவ்விழாவில் பெரிய குளம் மாங்கனி நகர் அரிமா சங்க தலைவர் ராமநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். மேலும் மாங்கனி நகர் அரிமா சங்க பொருளாளர் நித்தியானந்தம், டேவிட், அரிமா சங்க நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பெற்றோர் – ஆசிரியர் கழகத்தினர் மற்றும் 1972 ஆம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர் . பள்ளி தலைமை ஆசிரியர் எஸ் ஜே கோபிநாத் தேசிய கொடியினை ஏற்றி வைத்தார் .அதனைத் தொடர்ந்து பள்ளி என்சிசி மாணவர்களது கொடி அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாணவர்களது கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியராக பொறுப்பேற்ற நாளில் இருந்து சிறப்பாக பணியாற்றி, பள்ளி வளர்ச்சி மற்றும் மாணவர்களின் கல்வி வளர்ச்சியில் அக்கறை செலுத்தி வரும் விக்டோரியா நினைவு அரசினர் ஆண்கள் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் எஸ் ஜே கோபிநாத் அவர்களது செயல் மற்றும் சேவையை பாராட்டி மாங்கனி நகர் அரிமா சங்கத்தின் சார்பில், அரிமா சங்க தலைவர் ராமநாதன் உள்ளிட்ட அரிமா சங்க நிர்வாகிகள் நினைவு பரிசு வழங்கினார்கள். மேலும் கடந்த 2020- 2021, 2021. – 2022 ம் கல்வியாண்டில், போட்டித் தேர்வு, உள்ளிட்ட பல்வேறு தேர்வு மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, பெரியகுளம் மாங்கனி நகர் அரிமா சங்கத்தின் சார்பில் அரிமா சங்க தலைவர் பொறியாளர் ராமநாதன் அவர்கள் பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவித்தார். மேலும் இப்பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் பலரும் கலந்து கொண்டு தங்களது பழைய நினைவுகளை நினைவு கூர்ந்தனர். முன்னாள் மாணவர்களது சந்திப்பு நெகிழ்ச்சியானதாக இருந்தது. நிகழ்ச்சியின் முடிவில்இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்த, சிறப்பு விருந்தினர்கள், முன்னாள் மாணவர்கள், ஆசிரிய பெருமக்கள் மற்றும் மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது..

Related Articles

Back to top button
Close
Close