fbpx
Tamil News

புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த 40 சி.ஆர்.பி.எப் வீரர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிதிஉதவி – மத்திய அரசு அறிவிப்பு

ஜம்மு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் உள்ள கோரிபோரா பகுதியில் அதிகாரிகள் உள்பட மத்திய ரிசெர்வ் போலீஸ் படை வீரர்கள் சி.ஆர்.பி.எப் 2500 பேர் 70 வாகனங்களில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பாதுகாப்பு படையினர் சென்ற 2 பஸ்கள் மீது ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்த தற்கொலை படை தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை ஏற்றி வந்த வாகனத்தை கொண்டு மோதி தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

இவ்வாறு பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற பயங்கரவாதிகளால் நடத்தப்பட்ட இந்த கொடூர செயல் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் கொடியையும் பாகிஸ்தான் பிரதமரான இம்ரான் கான் மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது என்ற பயங்கரவாத அமைப்பை சேர்ந்த மசூர் அசார் என்ற கொடுரப்பாவியையும் எதிர்த்து மக்கள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தை அடுத்து உயிரிழந்த அந்த வீரர்களின் உடல்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு எடுத்து செல்லப்பட்டு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடத்தப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தேவையான உதவி செய்துதரப்படும் என்று மத்திய , மாநில அரசுகள் உறுதியளித்திருந்தனர். இவ்வாறு நடத்தப்பட்ட அந்த புல்வாமா தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாகிஸ்தான் எல்லைக்கும் புகுந்து ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் முகாம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 200-300 பயங்கரவாதிகள் உயிரிழந்திருக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.

தற்போது புல்வாமா தாக்குதலில் வீரமரணமடைந்த 40 சி.ஆர்.பி.எப் வீரர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.1.01கோடி நிதிஉதவி கிடைக்கவுள்ளது.

அதாவது ராணுவவீரர்கள் உயிரிழந்தால் அவர்களது குடும்பத்துக்கு தலா ரூ.35 லட்சம் தரப்படும். பணிக்கான தொகை , காப்பீடு, வீரதீர செயல்களுக்கான நிதி ஆகியவை சேர்த்து மொத்தம் ரூ.1.01கோடி நிதி அளிக்கப்பட உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Related Articles

Back to top button
Close
Close