fbpx
Others

தேனி மாவட்டம் கம்பம் அரசு மருத்துவமனையில் நடப்பது என்ன…?

(1) 2021 கொரோனா காலத்தில் வயிற்று வலி ஏற்பட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சென்ற பெண் நோயாளியிடம் அவரது கர்ப்பப்பை மிகவும் பலவீனமாக உள்ளது என்றும் அதை அகற்ற வேண்டும் என்று சொல்லி கம்பம் அரசு மருத்துவர் லேகா , அறுவை சிகிச்சை செய்தார்கள். அதில் பெண் நோயாளியின் இடது பக்கம் இருக்கக்கூடிய, நோயாளிக்கு வயிற்று வலியை ஏற்படுத்தக்கூடிய கட்டிகளைஅகற்றாமல்… அந்த பெண் நோயாளி ஜெகதீஸ்வரியின் வயிற்றில் வலது பக்கம் நன்றாக இருந்த சினைப் பையை நோயாளியின் அனுமதி இல்லாமல் அகற்றி (திருடி) எடுத்துள்ளார்கள். இதுசம்மந்தமாக பாதிக்கப்பட்ட பெண் புகார் மனு பலமுறை கொடுத்தும் இன்று வரை எந்தவிதமான நடவடிக்கை இல்லாததை கண்டித்தும்…!!!
(2) ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமிழக அரசால் வழங்கக்கூடிய தாட்கோ கடன் உதவி, தகுதி உடைய நபர்கள் தகுதி தேர்வாகியும்,.. பயனாளிகளுக்கு கடன் உதவியை வழங்காமல் சாதீய பாகுபாடுடன் நடந்து கொண்டு… கடனுதவியை தாழ்த்தப்பட்ட மக்களின் வாழ்வாதாரம் மேம்பட்டு விடக்கூடாது என்பதற்காகத்தான், நான் ரத்து செய்துள்ளேன் என்று சொன்ன கடமலைக்குண்டு இந்தியன் வங்கி மேலாளர் கமலவாணி மீது எஸ்.சி. எஸ்.டி வன்கொடுமை வழக்கு பதிவு செய்ய கோரி புகார் கொடுத்து பல நாட்கள் ஆகியும் நடவடிக்கை எடுக்காத காவல்துறையினரை கண்டித்தும்…..!!!  (3) பெரியகுளம் (தேவதானப்பட்டி) சில்வார்பட்டி கிராமத்தில் இருக்கக்கூடிய பழனி மாதாரி, கதிரி மாதாரி ஆகியோருக்கு வழங்கப்பட்ட பஞ்சமர் நிலத்தின் மோசடியான ஆவணங்களை கொண்டு ஆக்கிரமிப்பு செய்ய முற்பட்டு வரும் நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து பயனாளிகளின் வாரிசுதாரர்களுக்கு பஞ்சமர் நிலத்தை மீட்டுத் தர பலமுறை மனு கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கை இல்லாததை கண்டித்தும்..!!!. மக்களின் கோரிக்கைகளை தாமதிக்காமல் நிறைவேற்ற வலியுறுத்தி புரட்சித் தமிழர் கட்சியின் சார்பாக காத்திருப்பு போராட்டம், (ஆர்ப்பாட்டம்) நடைபெற்றது தலைமை  மாவட்ட செயலாளர் சு. வீரகுரு,முன்னிலை; சு. பாலா மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் மற்றும் நகர இளைஞரணி நிர்வாகிகள் போஸ்முருகன், மாணவரணி பொறுப்பாளர் சாரதி தமிழரசு, சிறப்பு அழைப்பாளர்களாக , மாநில தலைவர் அருந்தமிழரசு,
மாநில அமைப்பு செயலாளர் ஜெயராமன் உட்பட பலர் கலந்து கலந்துகொண்டு மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பிய நிகழ்ச்சி………………….. அரசு செய்தி செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close