fbpx
Others

தேனி–நெடுஞ்சாலைத்துறை உதவி செயல் பொறியாளர் கொத்தனார் படிப்பு படித்தவரா ??

ஏய் ! அட ஒதுங்கப்பா ! நெடுஞ்சாலைத்துறை ரோடு வருது  கொத்தனார் படிப்பு படித்த போடிநாயக்கனூர்நெடுஞ்சாலைத்துறை உதவி செயல் பொறியாளர் ? தேனி ஆட்சிதலைவர் சிறப்பு விருது வழங்குவாரா..?

தேனி மாவட்டத்தில் போடிநாயக்கனூர் நகராட்சியில் சாலைப் பணிமிகவும் தரம் அற்றதாகவும் , மின்சார கம்பங்களை அப்புறப் படுத்தாமலேயே, சாலையின் குறுக்கே மின்சார கம்பங்கள் இருந்தும் சாலை எவ்வாறு போட் டு உள்ளார்கள் ? மக்களின் வரிப்பணம் எப்படி வீணாக பயன்ப டுத்தப்பட்டுள்ளது என உண்மையிலேயே போடிநாயக்கனூர் மாநில நெடுஞ்சாலையின் உதவி செயற்பொறியாளர் கட்டிட பொறியாளர் தங்கராஜுக்கே வெளிச்சம்! பொறியாளர் படிப்பு தான் படித்தாரா ? இல்லை கொத்தனார் வேலைக்கு படித்தாரா? என்பதை நீங்களே அதாவது மக்களே யூகம் செய்து கொள்ளுங்கள் ? சாலையின் குறுக்கே உள்ள மின்சார கம்பங்களை அப்புறப்படுத்தாமல் தார் சாலை போட்டு உள்ளார்…. இவரின் நிலை இவ்வாறு இருந்தால் ? ஒப்பந்ததாரர் எப்படி ஒப்புக்கொண்டு சாலை போட்டார் என்பது ஏனோ புரியவில்லை ஆகவே போடி நெடுஞ்சாலைத்துறையினர் இவற்றை பார்வையிட்டு பெரிய.. பெரிய விபத்துக்கள் ஏதும் நடக்கும் முன்பாகவே உடனடியாக மாவட்ட அதிகாரிகள் பார்வையிட்டு இந்த குறையை நிவர்த்தி செய்ய செயலில் இறங்கி சரிசெய்யப்படுமா? அல்லது அப்படியே கிடப்பில் போடப்படுமா ? என்று போடி நகர பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் , போடி நகராட்சியில் புலம்பிய வண்ணமாக உள்ளனர் !!! இந்த செய்தியை பார்த்த பிறகாவது இவற்றை உடனடியாக நடவடிக்கை எடுப்பார்களா ? அல்லது காற்றில் பறக்க விட்டு விடுவார்களா? ………………………….. ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புச் செயலாளர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close