fbpx
Others

ராகுல் காந்தி உரையில் சில பகுதிகள் நீக்கம்…?

நாடாளுமன்றத்தில் புதிய ஆட்சி அமைந்த பிறகு முதல் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. நேற்றைய தினம் பல்வேறு விஷயங்கள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேசினார். இந்து மதம், பிரதமர் மோடி ஆட்சி, அக்னி வீரர்கள் திட்டம், மணிப்பூர் விவகாரம் என பேசிய ஒவ்வொரு விஷயங்களும் அவையில் அனலை கிளப்பின. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் அவ்வப்போது எழுந்து பதிலடி கொடுத்தனர். இந்நிலையில் ராகுல் காந்தி பேசிய சில விஷயங்கள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டிருப்பதாக சபாநாயகர் ஓம் பிர்லா அதிரடியாக தெரிவித்துள்ளார்.

Related Articles

Back to top button
Close
Close