fbpx
Others

தேனி–டிடிவி தினகரனின் பிறந்தநாளை முன்னிட்டு ரத்த தானம்

தேனி அருகே உள்ள கருவேல்நாயக்கன்பட்டியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் பிறந்தநாளை முன்னிட்டு தேனி வடக்கு மாவட்டம் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாவட்ட மருத்துவ அணி சார்பாக பொது மக்களுக்கான இலவச மருத்துவ முகாம் மற்றும் ரத்ததான முகாம் நடைபெற்றது .தனியார் திருமணம் மஹாலில் நடைபெற்ற இந்த ரத்ததான முகாமில் சுமார் 100க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு ரத்த தானம் அளித்தனர். இந்த முகாமில் பொதுமக்கள் மட்டுமல்லாமல் கல்லூரி மாணவர்களும் அரசுத்துறை வேலை வாய்ப்புகளுக்கு பயிற்சி மேற்கொண்டு வரும் மாணவர்களும் கலந்துகொண்டு ரத்த தானம் அளித்தனர்.தேனி நகர அமமுக

நிர்வாகிகள் முன்னிலையில் நடைபெற்ற இந்த ரத்த தான முகாமில் தலைமை நிலைய செயலாளர் மகேந்திரன், மாநில மருத்துவர் அணி செயலாளர் ஆகியோர் பங்கேற்று ரத்ததான முகாமை தொடங்கி வைத்தனர்  ரத்ததான முகாமில் அமமுக நிர்வாகிகள் ,பொதுமக்கள் தேனி : டிடிவி தினகரன் பிறந்தநாளை முன்னிட்டு ரத்ததான முகாம்.. ஏராளமானோர் பங்கேற்பு தன்னார்வலர்கள் ஆர்வத்துடன் ரத்ததானம் வழங்கினர் . இரத்ததான முகாமில் கலந்துகொண்டு ரத்த தானம் செய்த நபர்களுக்கு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி அலுவலர் பிரியா தலைமையில் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டன.

Related Articles

Back to top button
Close
Close