fbpx
Others

தேனி-கம்பம்-இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி.- இரத்ததான முகாம்..

இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி. தேனி மாவட்டம்.,கம்பம் வட்டார கிளையின் சார்பில் கூடலூர்அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று (23.07.2023) இரத்ததான முகாம் நடைபெற்றது.ஆரம்ப சுகாதார நிலைய தலைமை மருத்துவர் டாக்டர் முருகன் அவர்கள் முகாமைத் தொடங்கி வைத்தார்.கெளரவச் செயலாளர் திரு.க. சுருளிவேல் முன்னிலை வகித்தார்..பெரியகுளம்இரத்த வங்கி மருத்துவர் பாரதி அவர்கள் தலைமையிலான குழுவினர்இரத்த சேகரித்தனர்.நிகழ்வில் கம்பம் வட்ட ரெட் கிராஸ் தலைவர் மருத்துவர் பூர்ணிமா,செயலாளர் பாண்டி ஆசிரியர் குருதி தியாகராஜன், கூடலூர் குருதி நித்திஷ், குச்சனூர் கர்ணன், யோகா ரவி, ஐயா இராமமூர்த்தி மற்றும் சுருளிப்பட்டி அன்புராஜா ஆகியோர் முகாமை ஒருங்கிணைத்து வெற்றிகரமாக நடத்தினர். தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close