fbpx
RE

சென்னை வந்தடைந்தது 24 ஆயிரம் கொரோனா பரிசோதனை உபகரணங்கள்.

சீனாவின் உகான் நகரில் தோன்றிய இந்த கொரோனா வைரஸ் உலகையே இன்று ஆட்டி படைக்கிறது. பல நாடுகளும் இந்த தொற்று வைரஸின் தாக்கத்தால் பெரிதும் பாதிப்படைந்துள்ளன.தற்போது இந்தியாவிலும் இந்த வைரஸின் பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனை தடுக்க மத்திய அரசு பல்வேறு தடுப்பு முயற்சிகளை எடுத்து வருகின்றது.

பல நாடுகளில் பல்லாயிரம் கணக்கில் மக்கள் மடிந்து வரும் நிலையில் இந்தியாவில் அதன் தாக்கம் அந்த அளவிற்கு அதிகரிக்கவில்லை. இன்று வரை இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 13 ஆயிரத்தை தாண்டியும் ,உயிரிழந்தோர் எண்ணிக்கை 437ஆகவும் உள்ளது. இது தொற்று நோய் என்பதால் தொடர்ந்து மக்களிடையே கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வருகின்றது.

இவ்வாறு நடத்தப்படும் பரிசோதனைகளின் முடிவுகளை உடனடியாக தெரிந்துகொள்ள போதிய உபகரணங்கள் இந்தியாவில் இல்லை. அதனால் இந்த கொரோனா பரிசோதனை உபகரணங்களை வாங்குவதற்க்கு சீனாவிடம் இந்தியா ஆர்டர் கொடுத்தது. முதற்கட்டத்தில் தயாராக இருந்த உபகரணங்கள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுவிட்டன என கூறப்பட்டது.

அதனால் இந்தியாவுக்கு உபகரணங்கள் வருவதில் காலதாமதம் ஏற்பட்டது.இந்நிலையில் ஆன்டிபாடி பரிசோதனை உபகரணங்கள் மற்றும் ஆர்.என்.ஏ பரிசோதனை உபகரணங்கள் உள்ளிட்ட கொரோனா பரிசோதனைக்கு தேவையான 6.5 லட்சம் மருத்துவ உபகரணங்கள் , சீனாவின் குவான்சு விமான நிலையத்தில் இருந்து இந்தியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது என சீனாவுக்கான இந்திய தூதர் நேற்று செய்தியாளர்களிடம் கூறினார்.

இந்நிலையில் தமிழகத்திற்கு தேவையான 24 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் என்ற கொரோனா பரிசோதனை உபகரணங்கள் பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வந்துள்ளது. கொரோனா தொற்று தற்போது அதிகம் பரவிக்கொண்டிருக்கும் நிலையில் இந்த ரேபிட் டெஸ்ட் உபகரணங்கள் மூலம் கொரோனா சோதனை முடிவுகளை மிக விரைவாக அறிய முடியும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close