fbpx
Others

தேனி-அயோத்தியில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டுஐஸ் கட்டியில் ஜெய் ஸ்ரீ ராம்.

 தேனியில் 2024 கிலோ ஐஸ் கட்டியில் ஜெய் ஸ்ரீ ராம் எழுத்து வடிவமைப்பு !!! உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில்(22.1.2024) ராமர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளதை முன்னிட்டு பாஜக மற்றும் இந்துத்துவா அமைப்புகளின் சார்பில் பொதுமக்களிடம் பல்வேறுவிழிப்புணர்வுகள்ஏற்படுத்தப்பட்டு  வருகிறது. இதனை தொடர்ந்து அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 2024 கிலோ ஐஸ் கட்டிகள் ஜெய் ஸ்ரீ ராம் எழுத்து வடிவமைப்பினை தேனி மாவட்டம், தேனியில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்தி கோவில் முன்பு எம். .எம் பல் மருத்துவமனை நிர்வாக இயக்குனரும், பாஜக மருத்துவப் பிரிவு பல் டாக்டர் பாஸ்கரன் தலைமையிலும், ஏசி வி மில் குழுமம் சந்திரசேகர் முன்னிலையில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டு ஜெய் ஸ்ரீ ராம் கோஷங்கள் எழுப்பட்டது.2024 கிலோ ஐஸ் கட்டியில் ஜெய் ஸ்ரீ ராம் என்ற எழுத்தினை இரண்டு மணி நேரத்தில் காய்கறி சிற்பி இளஞ்செழியன் வடிவமைத்தார். இந்நிகழ்ச்சியில் பா.ஜ.க.தேசிய பொதுக்குழு உறுப்பினர் கனகராஜ், டாக்டர் நாராயண பிரபு, கல்வியாளர் பிரிவு மாநில செயலாளர் மனோகரன், மாவட்ட பொதுச் செயலாளர் பா.ஜ.க.விவசாய பிரிவு டாக்டர் ஆனந்த பத்மநாபன் மற்றும் பலர் கலந்து கொண்ட நிகழ்ச்சி…………………………………………………. ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்பு துணைச் செயலாளர், தமிழக ரிப்போர்ட்டர் மாவட்ட செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close