fbpx
Others

தேனி-அமுமுக வேட்பாளர் டிடிவி தினகரன்வாக்கு சேகரிப்பு – சிறப்பு செய்தி

தமிழ்நாடு – கடந்த தேனி பாராளுமன்ற தேர்தலைப் போன்று இந்த தேர்தலிலும் விஐபி தொகுதியின் நிலை!! சென்ற பாராளுமன்ற தேர்தலை போல் இந்த தேர்தலும் தேனி தொகுதி விஐபிகளுக்கு உரிய தொகுதியாக விளங்கி வருகிறது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்கள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். சரி நிலைமை என்ன என்று தெரிந்து கொள்ள கிராமம் தோறும் சுற்றி வந்தோம். அமுமுக வேட்பாளர் டிடிவி தினகரனை கிராம மக்கள் அனைவரும் நினைவில் தான் வைத்துள்ளார்கள். அவர் எங்கள் ஊர் கோவிலுக்கு பணம் பல்வேறு வகையான உதவிகளையும் செய்து கொடுத்தார் என்றும், சில இடங்களில் அவர் எம்பியாக இருக்கும் போது எந்த விசேஷம் என்றாலும் அவரை அணுகினால் உடனடியாக என்ன செய்ய வேண்டுமோ அதை உடனடியாக அவர் சார்பாக செய்து அனுப்புவார் என்று மக்கள் அதிகமாக பேசுவதை நம்மால் கேட்க முடிந்தது. திமுக வேட்பாளர் தங்கத்தமிழ் செல்வன் தன்னுடைய பரிவான பேச்சினால் மக்கள் மனதில் இடம் பிடிக்க நினைக்கிறார், அதுவும் சில இடங்களில் அவர் மேல் ஒரு விதமான இரக்கத்தை கொண்டு வந்திருப்பதை நம்மால் தெரிந்து கொள்ள முடிகிறது. எது எப்படி இருந்தாலும் டிடிவி தினகரன் சின்னமான குக்கர் சின்னத்தின் விசில் சத்தத்தை மிகவும் அதிகமாக கேட்க முடிகிறது……….. இருப்பினும் மக்களின் மனதில் நிற்பவர் யார்? என்பது அந்த இறைவனுக்கே வெளிச்சம்!!!……. பொறுத்திருந்து பார்ப்போம் !!!……………………………………. ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புச் செயலாளர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close