fbpx
ChennaiRETamil NewsTrending Nowதமிழ்நாடு

தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி..! வானிலை மையம் அறிவிப்பு!

Chennai weather centre cyclone warning

சென்னை:

தென்கிழக்கு வங்கக்கடலில் வரும் 8ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வானிலை நிலவரம் சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தென்மேற்கு பருவமழை அடுத்த வாரம் கேரளா, கர்நாடகத்தில் தீவிரமடையும்.

ஜூன்.10ல் இருந்து 14 வரை கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பலத்த மழைக்கு வாய்ப்பு உள்ளது. 10ம் தேதியில் இருந்து சென்னை, திருவள்ளூர், புதுச்சேரியில் வெப்பச் சலனத்தால் மழை பெய்யும்.

சென்னை, திருவள்ளூரில் மாலை அல்லது இரவில் இடியுடன் மழை பெய்யும்.ஜூன் 10ல் இருந்து 14 வரை நீலகிரி, கோவை உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும்.

வடக்கு அந்தமான் கடலில் அடுத்தவாரம் காற்றழுத்த சுழற்சி உருவாகி தீவிரமடைந்து, 9-10 ஆகிய தேதிகளில் ஒடிசா வரும் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தென்மேற்கு பருவமழை மீண்டும் தீவிரமடையும்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close