fbpx
ChennaiGeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

பொது போக்குவரத்துக்கு ஜூனில் அனுமதியா?..! ஆம்னி பஸ் முன்பதிவு ஆரம்பம்!

Taminadu Omni bus reservation opened

சென்னை:

தமிழகத்தில் இணையம் வழியாக ஆம்னி பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கி இருக்கிறது. இதன் மூலம் ஜூன் மாதம் பொது போக்குவரத்து தொடங்கிவிடும் என்று தெரிகிறது.

கொரோனாவை கட்டுப்படுத்த 3 கட்டமாக ஊரடங்கு மே 17ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. வைரஸ் பரவர் அதிகமான காரணத்தால் மே 17ம் தேதியில் இருந்து 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கடும் பாதிப்புள்ள சென்னை உள்பட 12 மாவட்டங்களில் தளர்வு அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், தமிழகத்தில் இணையம் வழியாக ஆம்னி பேருந்துகளுக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது.

ஜூன் 1ம் தேதியின் போது 4ம் கட்ட ஊரடங்கு முடிந்துவிடும். ஆகவே அதற்கு பிறகாக தேதிகளில் தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு செல்வதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

பண்டிகை நாட்களுக்கான கட்டணம் இப்போது வசூலிக்கப்படுகிறது. ஆனால் தமிழக அரசு அறிவித்த பின்னரே பேருந்துகள் இயக்கப்படும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் கூறி உள்ளது.

Tags

Related Articles

Back to top button
Close
Close