fbpx
Tamil Newsஉணவு

குளோப்ஜாமுன் செய்வது எப்படி?

இப்போது பண்டிகை காலம் வருவதால் அனைவரின் வீட்டிலும் இனிப்பு பலகாரங்கள் செய்யும் வேலைகள் பரபரப்பாக தொடங்கும். அப்படி இருக்கும் போது பெரியவர்களிலிருந்து சிறியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடும் இனிப்பு பலகாரமாக குளோபிஜாமுன் உள்ளது. இதை நாம் பாக்கெட்டுகளில் விக்கும் போடர் மூலம் செய்வதை விட வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து செய்தால் ருசியாகவும் இருக்கும் அதிகமாகவும் கிடைக்கும். இப்படி எல்லோரும் விரும்பக்கூடிய குளோபிஜாமுனை எப்படி செய்வது என்று பார்க்கலாமா ,

 

தேவையான பொருட்கள் ;

மைதா 1/4 கிலோ
இனிப்பில்லா பால்கோவா அரைகிலோ
சர்க்கரை 1 கிலோ
நெய் 50 கிராம்
பால் 1 டம்ளர்
பேக்கிங் சோடா சிறிது
வறுக்க தேவையான எண்ணெய்

செய்முறை ;

முதலில் நெய்யை உருக்கிக்கொள்ள வேண்டும் அதாவது எண்ணெய் போல வரும் வரை செய்து கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு பேசனில் மைதாவை போட்டு , அதனுடன் இனிப்பில்லா பால்கோவா , உருக்கிய நெய் மற்றும் பேக்கிங் சோடா போட்டு ரொட்டி மாவை போல் பால் ஊற்றி பிசைக்கவேண்டும். மைதாவும், பால்கோவாவும் ஒன்றுடன் ஒன்று சேரும் வரை நன்றாக மசிக்கவேண்டும்.

சர்க்கரை பாகு செய்வது எப்படி ;

ஒரு பாத்திரத்தில் சர்க்கரை போட்டு அதில் நீர் ஊற்றி நன்கு கொதிக்க வைக்க வேண்டும். பின் அது கம்பி பாகு வந்தவுடன் இறக்கி அறவைக்கவேண்டும். இதோ தய்யார் ஆனது சர்க்கரை பாகு.

குளோப் ஜாமுன் செய்வது ;

பிசைத்து வைத்த மாவை சிறு சிறு உருண்டையாக உருட்டி வைத்துக்கொள்ள வேண்டும். பின் வாணலியில் எண்ணெய் ஊற்றி நன்கு சூடானதும் அதில் இந்த உருண்டையை போட்டு பொன்னிறமாகும் வரை வறுத்துக்
கொள்ளவேண்டும். வறுத்த உருண்டைகளை சர்க்கரை பாகுவில் போட்டு ஊறவைக்க இதோ தய்யார் ஆகிவிட்டது ஸ்பெஷல் குளோப் ஜாமுன்.

Related Articles

Back to top button
Close
Close