fbpx
Others

ராணிப்பேட்டை மாவட்டம் துறைசார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை என்ன..?

சிகிச்சைக்காக வரும் நோயாளிகளிடம் தூய்மை பணி செய்ய கட்டாயப்படுத்தும் ஆயாக்கள் கண்டுகொள்ளாத மருத்துவர்கள்..?

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு நகராட்சிக்குட்பட்ட பகுதி கலவை செல்லும் சாலையில் அரசு கண் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது இம்மருத்துவமனைக்கு ஆற்காடு சுற்றுவட்டார பகுதிகளிலுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கண் பரிசோதனை மற்றும் அறுவை சிகிச்சைகாக வந்து செல்கின்றனர் இந்த நிலையில் மருத்துவமனையில் ஆயமாவாக வேலை செய்து வரும் சுமித்ரா, மேனகா, ஜெகதீஸ்வரி ஆகியோர் கண் அறுவை சிகிச்சைக்காக வரும் நபர்களுக்கு உதவியாக வரும் உதவியாளர்களை மருத்துவமனையை தூய்மைப்படுத்தவும் குப்பைகளை பெருக்கி வாரச் சொல்வதாகவும் வேலை செய்ய மறுக்கும் நபர்களிடம் முறுமுறுத்து வருவதாகவும் கூறப்படுகிறது ஒவ்வொரு நாளும் இரவு 7.30மணிக்குமேல்மருத்துவமனையில் செவிலியரோ, டாக்டரோ இருப்பதில்லை ஆயக்கல்தான் செவிலியர்கள் செய்ய வேண்டிய வேலைகளை செய்து வருவதாக பொதுமக்கள் வட்டாரத்தில் சொல்லப்படுகிறதுமேலும் டோக்கன் போடுவதற்கு நோட்டு, பேனா வாங்க வேண்டும் என்ற பேரில் ரூபாய் 30 வசூல் செய்வதாகவும் கூறுகின்றனர் கண் அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர்கள்நோயாளிகளிடம் கரிசனை காட்டுவதை விட கடிந்து கொள்வதே வாடிக்கையாககொண்டுள்ளதாகசொல்கின்றனர் ஆற்காடு அரசு மருத்துவமனையில் கழிவறைகள் சுத்தமாக இல்லை இப்படி பல்வேறு குறைபாடுகளோடு செயல்பட்டு வரும் ஆற்காடுகண்மருத்துவமனை, சுகாதார அரசு மருத்துவமனையின் மீது துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை  எடுத்து சரி செய்ய வேண்டும் என பொதுமக்களால் கோரிக்கை எழுந்துள்ளது

Related Articles

Back to top button
Close
Close