fbpx
Others

திருவள்ளூர்-சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூர்…செய்தி

*பாடியநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி!  திருவள்ளூர் மாவட்ட ம் சோழவரம் ஒன்றியம் பாடியநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.பள்ளி தலைமை ஆசிரியர் மீனா குமாரி தலைமை தாங்கினார்.
சோழவரம் ஒன்றிய துணை பெருந்தலைவர் மீ.வே.கருணாகரன் முன்னிலை வகித்தார்.இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் மாதவரம் எஸ்.சுதர்சனம் மாணவ மாணவிகளுக்கு படிப்பில் கவனம் செலுத்த பல்வேறு அறிவுரைகளை வழங்கி இலவச மிதிவண்டியை வழங்கினார்.இதில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் இன்னாசி, பொருளாளர் முகமது அலி, இணை செயலாளர் செந்தில், பள்ளி மேலாண்மை குழு சிவகாமி மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் திமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close