fbpx
ChennaiRETamil NewsTrending Nowதமிழ்நாடு

ஒன்றல்ல… இரண்டல்ல…! 10 லட்சம் கொரோனா பரிசோதனை கிட்…! கலக்கும் தமிழகம்

1 lakh corona RT-PCR kut came to tamilnadu

சென்னை: தமிழகத்திற்கு மேலும் 10 லட்சம் ஆர்டி பிசிஆர் சோதனை கருவிகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.

கொரோனாவை விரைவாக கண்டுபிடித்து பரிசோதனை நடத்துவதற்காக மத்திய அரசு, சீனாவில் இருந்து ரேபிட் டெஸ்ட் கிட் கருவியை பல லட்சம் கொள்முதல் செய்தது. ஒன்றின் விலை ரூ.600. தமிழகத்திற்கும் 34 ஆயிரம் ரேபிட் டெஸ்ட் கிட்  கருவியை மத்திய அரசு அனுப்பி வைத்தது.

இதையடுத்து சேலம், சென்னை உள்ளிட்ட  பகுதிகளில் ரேபிட் கிட் மூலம்  சில நாட்களாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. தவறான முடிவுகள் வருவதால் நாடு முழுவதும் பரிசோதனை செய்ய வேண்டாம் மத்திய அரசு உத்தரவிட்டது.

தமிழகம் முழுவதும் கொரோனா தொற்றை கண்டறிய கூடுதலாக ஆர்டி பிசிஆர் கருவிகள் வாங்க திட்டமிடப்பட்டது. இந்த கருவிகள், தமிழகம் வந்து சேர்ந்த நிலையில், அனைத்து மாவட்ட மருத்துவமனைகளுக்கும் பிரித்து அனுப்பப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மேலும் 10 லட்சம் ஆர்டி பிசிஆர் கருவிகளுக்கு தென்கொரியாவிடம் முன்பதிவு செய்துள்ளதாக, சுகாதாரத்துறை அதிகாரிகள்  தெரிவித்துள்ளனர். அதன் மூலம், தமிழகத்தில் கொரோனா பரிசோதனை விரிவுபடுத்தப்படும் என்று தெரிகிறது.

Tags

Related Articles

Back to top button
Close
Close