fbpx
Others

திமுக முப்பெரும் விழா- முன்னோடிகளுக்கு விருதுவழங்கிய–மு.க.ஸ்டாலின் 

 விருதுநகர்- திமுக முப்பெரும் விழா– முன்னோடிகளுக்கு விருதுகளை வழங்கிய மு.க.ஸ்டாலின்  கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கு கலைஞர் விருது வழங்கப்பட்டது. விழாவில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். விருதுநகர் அருகே பட்டபுதூரில் இன்று தி.மு.க. முப்பெரும் விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் திமுக தலைவரும் முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கட்சியின் முன்னோடிகளுக்கு விருதுகளை வழங்கினார். சம்பூர்ணம் சாமிநாதனுக்கு பெரியார் விருதும், கோவை இரா.மோகனுக்கு அண்ணா விருதும், கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலுவுக்கு கலைஞர் விருதும் வழங்கப்பட்டது. புதுச்சேரி நிர்வாகி சி.பி.திருநாவுக்கரசுவுக்கு பாவேந்தர் விருது, குன்னூர் சீனிவாசனுக்கு பேராசிரியர் விருதும் வழங்கப்பட்டது. விழாவில் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
திமுக முப்பெரும் விழா- முன்னோடிகளுக்கு விருதுகளை வழங்கிய மு.க.ஸ்டாலின்

Related Articles

Back to top button
Close
Close