fbpx
Others

திமுகவில் பாஜக 600 பேர்ஐக்கியம் …..

பாஜக பட்டியலின பிரிவு மாநில பொதுச்செயலாளராக இருந்த விநாயகமூர்த்தி கடந்த வாரம் அக்கட்சியில் இருந்து விலகி முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இதைத்தொடர்ந்து ஈரோடு தெற்கு மாவட்ட பாஜ தொழிற்சங்க நிர்வாகி சீனிவாசன் நேற்று முன்தினம் ஈரோட்டில் அமைச்சர்கள் எ.வ.வேலு, முத்துசாமி, செந்தில்பாலாஜி ஆகியோர் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். இந்நிலையில், நேற்று ஈரோடு அசோகபுரத்தில் பாஜவில் இருந்து விலகிய 600 பேர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இவ்விழாவிற்கு அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமை தாங்கினார். அமைச்சர்கள் கே.என்.நேரு, சு.முத்துசாமி, எம்ஆர்கே பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலையில் 600க்கும் மேற்பட்டோர் பாஜவில் இருந்து விலகி திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் எம்எல்ஏ கோவை செல்வராஜ், சீனிவாசன், விநாயகமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர். பாஜவில் இருந்து விலகி திமுகவில் இணைவது தினந்தோறும் அரங்கேறி வருவதால் ஈரோட்டில் விரைவில் பாஜ கூடாரம் காலியாகும் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Related Articles

Back to top button
Close
Close