தஹி — உணவு தர கட்டுப்பாடு ஆணையம் திரும்பபெற்றது.
-
”தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள்: எச்சரித்த முதல்வர் தயிர் பாக்கெட்டில் இந்தி கட்டாயம் என்ற அறிவிப்பை மத்திய உணவு தர கட்டுப்பாடு ஆணையம் திரும்ப பெற்றது. தயிர் பாக்கெட்களில் தஹி என்ற இந்தி வார்த்தை இடம்பெற்றிருக்க வேண்டும் என்று இந்திய உணவு தர கட்டுப்பாட்டு ஆணையம் அறிவித்திருந்தது. இதற்கு தென்மாநிலங்களில் கடும் எதிர்ப்பு எழுந்தது. குறிப்பாக தமிழ்நாட்டில் ஆவின் தயிர் பாக்கெட்களில் இந்தி வார்த்தை இடம்பெறாது என்று அமைச்சர் நாசர் கூறினார். மேலும் இந்திய உணவு தர கட்டுப்பாட்டு ஆணையத்தின் அறிவிப்பிற்கு தமிழ்நாடு முதலமைச்சர் கடும் கண்டனம்தெரிவித்தார் குழந்தையைக் கிள்ளிவிட்டுச் சீண்டிப் பார்க்கும் நயவஞ்சக எண்ணம் யாருக்கும் வேண்டாம் என்று டிவிட்டரில் பதிவிட்டு இருந்த மு.க.ஸ்டாலின், தொட்டிலை ஆட்டும் முன்னர் தொலைந்துவிடுவீர்கள் என்று எச்சரித்து இருந்தார்.இதே போன்று மற்ற அரசியல் கட்சி தலைவர்களும் உணவு தர கட்டுப்பாட்டு ஆணையத்தின் அறிவிப்பிற்கு எதிர்வினை ஆற்றினர். இந்நிலையில், தயிர் பாக்கெட்டில் இந்தி வார்த்தை இடம்பெற்றிருக்க வேண்டும் என்ற அறிவிப்பை உணவு தர கட்டுப்பாடு ஆணையம் திரும்ப பெற்றது. ஆங்கில வார்த்தையுடன் உள்ளூர் மொழியை அடைப்பு குறியில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.