தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்திடம் புகார்…?
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் எந்த சிலம்ப அமைப்புக்கும் அங்கீகாரம் வழங்கவில்லை ஆனால் சில அமைப்புகள் அங்கீகாரம் பெற்றதாக சொல்லி மாணவர்களை ஏமாற்றிவருகிறது. அது மட்டும் அல்லாமல் சிலம்ப போட்டி நடத்துகின்ற போது அழைப்பிதழ்களில். சான்றிதழ்களில் விளையாட்டு மேம்பாட்டு ஆணைய சின்னத்தை அச்சிட்டு அரசையும் ஏமாற்றி வருகின்றனர்.இதனை கண்டித்து உலக சிலம்ப ஆசான்கள் மற்றும் சிலம்ப ஆசிரியர்கள் ஒருங்கிணைந்த சங்கத்தின் சார்பில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அலுவலகத்தில் உறுப்பினர் செயலரிடம் சங்கத்தின் செயலாளர் ஆர் முருகக்கனி துணைத் தலைவர் அகத்தியா. ஞானம். இணை செயலாளர் எம். ராஜா துணை செயலாளர்கள்
உ. விஜயன் எஸ்.ஜே அருண் கேசவன். சண்முகம் மற்றும் கோவா மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ்செல்வன் ஆகியோர் புகார் மனுவை வழங்கினர். சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தகவல் வழங்கப்பட்டது..