fbpx
Others

 தமிழ்நாடு – தேனி மாவட்டம் தேனியில் நடந்த தேர்தல் பரப்புரை..

தமிழ்நாடு – தேனி மாவட்டம் தேனியில் நடந்த தேர்தல் பரப்புரை கூட்டத்தில் எம்ஜிஆர் ஜெயலலிதா கட்சிக்கு வந்த நிலைமையை பாருங்கள் !!! அண்ணே! நல்ல ஐடியாவா இருக்கே ! கட்சிக்காரங்கள எல்லார் முன்னாடியும் அதிமுக கட்சிக்காரர்களை கோவமா திட்டனணும், கூட்டணி கட்சிக்காரங்க மேல எரிஞ்சு ..எரிஞ்சு ..விழுணும் ! இப்படி செஞ்சா எதிர்க்கட்சி குக்கரை ஜெயிக்க வச்சுரலாம், தான் இருக்கும் கட்சியை தோக்கடிச்சிடலாம் ! நல்ல ஐடியாவா இருக்கே ! பெரிய குளத்தில் உள்ள குறிப்பிட்ட வீட்டில், இலை கட்சியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி குக்கருக்குள் மறைமுக உடன்படிக்கை ! குத்தாட்டத்துடன் ஆரம்பித்த அ தி மு க பரப்புரை கூட்டம் நடைபெற இருக்கின்ற நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, சூறாவளி சுற்றுப்பயணத்தில் வாக்குகளை சேர்த்து வருகிறார். மதுரையில் அதிமுக வேட்பாளர் சரவணனுக் கு வாக்கு சேகரித்த பின்பு தேனி பாராளுமன்ற வேட்பாளர் நாராயணசாமிக்கு வாக்கு சேகரிக்க வந்தார் . கூட்டம் கலையாமல் இருக்க குத்தாட்ட கலை நிகழ்ச்சிகளுக்கு நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். இது ஒரு புறம் இருக்க, பிளக்ஸ் பேனரில் தேனி பாராளுமன்ற வேட்பாளர் என்பதற்கு பதிலாக , மதுரை பாராளுமன்ற வேட்பாளர் என்றிருந்தது. கடைசி நேரத்தில் மதுரை என்ற வார்த்தையை அடித்து விட்டு தேனி என்ற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டது, கூட்டத்தில் கலந்து கொண்டவர்களிடையே பெரும் சலசலப்பை ஏற்ப டுத்தியது . செய்தியாளர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட இடத்தில் ,மது பிரியர்கள் சிலர் குத்தாட்டம் போடும்போது செய்தியாளர்களின் ஒளிப்பதிவு சாதனங்கள் ,சேதமடையும் சூழ்நிலையும் ஏற்பட்டது. இந்நிலையில் கூட்டத்தில் கூட்டணி கட்சியினர் குமுறும் சிலவார்த்தைகளையும் கேட்க முடிந்தது! இந்நிலையில் கூட்டத்தில் கூட்டணி கட்சியினர்குமுறும் சில வார்த்தைகளையும் கேட்க முடிந்தது ! தேனி அதிமுக நாடாளுமன்றவேட்பாளர்நாராயணசாமி தோல்விக்கு மாவட்ட நிர்வாகிஒருவர் உட்பட ஒரு சிலர் துணை போவதாகவும் ஒருபேச்சு அடிபட்டது…..மேலும்கூட்டணிகட்சிநிர்வாகிகளிடம்,மாவட்டநிர்வாகிஎரிந்து,எரிந்துவிழுவதாகவும் சரிவர அரவணைத்துசெல்வதில்லை என்றும் குமுறினார்கள். அப்பப்பா….. கட்சிக்குள்ளேயே எத்தனையோஅலிபாபாவும்…….. திருடர்களும்………. இது சம்பந்தப்பட்ட கட்சியினர்க்கே …வெளிச்சம்……………… ஏதோ தேர்தலுக்கு மக்களிடையே ஆதரவு கேட்டு வாக்கு சேகரித்தால் சரி…. என்று பொதுமக்கள் புலம்புவது நன்கு கேட்க முடிகிறது ………… ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்புச் செயலாளர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி.

Related Articles

Back to top button
Close
Close