fbpx
Others

தமிழ்நாடு – தேனி கம்பம்-மெட்டு அயர்ந்து தூங்கும் நெடுஞ்சாலை துறை. ?.

தேனி மாவட்டம் – கம்பம் மெட்டு காலனியில் இருந்து பதினெட்டாம் கால்வாய் செல்லும் வரை பிரதான சாலைகளின் இரு புறங்களிலும் சிறு மற்றும் பெரும் கடைகள்அமைத்துதிடீர்,திடீரெனஅதிகரிக்கும்ஆக்கிரமிப்புகள்..இவ்வாறான ஆக்கிரமிப்புகளால் இந்த வழித்தடத்தில் அடிக்கடி அரங்கேறும் போக்குவரத்து இடையூறு அதனைத் தொடர்ந்த போக்குவரத்து நெரிசல்,விபத்து உள்ளிட்ட காரணங்களுக்காக காவல்துறையும் போக்குவரத்து துறையும் கண்டு(ம்) கொள்வதே இல்லை ஏன்?.. தேனி மாவட்டத்தில் கம்பம் வடக்கு காவல் நிலையம் ஒட்டிய கம்பம் மெட்டு காலனியில் இருந்து 18-ம் கால்வாய் வரையில் குறிப்பாக, பிரதான சாலையில் பணம் மற்றும் படைபலம் படைத்து, சட்டத்தை தங்கள் சட்டை பையில் வைத்து திரியும் அதிகாரத்திற்கும் அதிகாரிகளுக்கும் கட்டுப்படாத சில தனி நபர்கள்நெடுஞ்சாலை துறையின் இடங்களை நெடுஞ்சாலைத் துறையின் இடம் என தெரிந்தே ஆக்கிரமித்து சிறிய மற்றும் பெரிய கடைகளை உருவாக்கி, கற்கால்களை ஊன்றி, கம்பி கேட் அமைத்தும், மேற்கொண்டு சில இடங்களில் மூடப்பட்ட தகரக்கொட்டகை மற்றும் திறந்த வெளி தகரக்கொட்டகை அமைத்தும்,நெடுஞ்சாலை துறைக்கு சம்பந்தப்பட்ட இடங்களை பகிரங்கமாக ஆக்கிரமிப்பு செய்து வரும் நடவடிக்கைகளில் சில தனிநபர்கள் ஈடுபட்டு வருகின்றனர் . மேற்கண்ட ஆக்கிரமிப்பாளர்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பிரதான சாலையில் அமைந்துள்ள இடங்களை சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறையினர் அலுவல் நிமித்தமாக அங்கும் இங்கும் செல்லும்போது நெடுஞ்சாலைத் துறையினரின் அதிகாரிகள் மற்றும் அலுவலர்களின் கண்களுக்கு தென்படவில்லையா? மாறாக, தெரிந்தும், “நமக்கேன் வம்பு” என கண்டு(ம்) கொள்ளாமல் கடந்து சென்று வருகிறார்களா? என _தமிழ்நாடு சமூகநல பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பினர், தற்போது கேள்வி எழுப்பி வருகின்றனர். மக்கள் வரிப்பணத்தில் நெடுஞ்சாலை துறை எனும் துறையை உருவாக்கி அந்த துறையினருக்கு மேல் மட்டம் தொடங்கி கீழ் மட்டம் வரை சம்பளம் கொடுத்து வரும் சாமானிய மக்கள், துறையின்ஆக்கிரமிப்புகளை  வழக்காடு மன்றம் வரை சென்று… சாமானிய மக்களது வரிப்பணத்தில் தான் நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றால் மக்கள் வரிப்பணத்தில் இந்த துறை செயல்படுவது எவ்விதத்தில் நியாயம்…? ?? இதற்கு இந்த நெடுஞ்சாலைத் துறை தேவையே இல்லையே ..  நெடுஞ்சாலை துறையின் இடங்களை ஊரான்களுக்கு ஊட்டி கொடுப்போம்… தங்களது வருமானம் தானாய் பெருகும் என்ற எண்ணமோ/திட்டமோ நெடுஞ்சாலைத் துறைக்கு… அதுசமயம், இது சம்பந்தப்பட்ட தேனி மாவட்ட நெடுஞ்சாலை துறையினர் தாமாக முன் வந்து தேனி மாவட்டத்து நெடுஞ்சாலைகளில் குறிப்பாக, பைபாஸ் மற்றும் பிரதான சாலைகளில் ஆக்கிரமித்துள்ள நெடுஞ்சாலைத் துறையின் இடங்களை போர்க்கால அடிப்படையில் கைப்பற்றி தங்களது வசம் வைத்துக் கொள்ள முனைப்பு காட்டிடவேண்டுமெனஎன்றுதமிழ்நாடுசமூகநலபத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பினர் மற்றும் மாவட்ட வாழ் சமூக நல விரும்பிகள் தேனி மாவட்ட நெடுஞ்சாலைத் துறையினருக்கு கோரிக்கை விடுத்துவருகின்றனர்… எடுத்துக்காட்டாக தேனி மாவட்டத்தில் எத்தனையோ ஆக்கிரமிப்புகளை பார்த்து வருகின்றோம்.தங்களது இடத்தினை ஆக்கிரமிப்பு செய்யும்போது இது சம்பந்தப்பட்ட துறையினர் கண்டு(ம்) கொள்ளாமல் கைகட்டி வேடிக்கை பார்ப்பதும், மேற்படி தேவையானதை பெற்றுக் கொண்டு வாய் பூட்டி மெளனம் காப்பதும் அதன் பின்பு சமூக நலனில் அக்கறை கொண்டோர் ஒரு சிலர் வழக்காடு மன்றம் வரை சென்று அவ்வாறான ஆக்கிரமிப்புகளை எடுத்து வருவதும் நமது தேனி மாவட்டத்தில் அங்குமிங்குமாய் அரங்கேறி வருவதை சமீப காலமாக நம்மால் காண முடிகிறது.ஆக, மொத்தத்தில் நமது தேனி மாவட்டத்தில் துறை சார்ந்த நிர்வாகங்கள் தங்களது இடத்தினை தற்காத்துக் கொள்ள முடியாத சூழலில் அலட்சியம் காட்டி வருகின்றது எனவும், அவ்வாறான துறை சார் அரசின் இடங்களை மீட்க வேண்டும் என்றால் அதற்கு வழக்காடு மன்றங்கள் வரை சென்று வழக்காடு மன்றங்கள் மூலமாகத் தான் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்றால் எதற்காக இந்த மாதிரியான துறைகள்…??? எதற்காக மாவட்ட நிர்வாகம்…???என தேனி மாவட்ட வாழ் சமூக நல பற்றாளர்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கேள்வி எழுப்பி வருகின்றனர்….ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்பு துணைச் செயலாளர், தமிழக ரிப்போர்ட்டர் மாவட்ட செய்தியாளர், அரசு செய்தி தேனி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close