fbpx
Others

செய்தி துளிகள்……20 / 11 / 22

:

சுங்கச்சாவடி கட்டணம் 40% வரை குறைகிறது  நாடு முழுவதும் உள்ள சுங்கச்சாவடிகளை அகற்ற வேண்டும் என திமுக எம்பி வில்சன் ஆகஸ்ட் மாதம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில், நாடு முழுவதும் சுங்கச்சாவடி கட்டணம் 40% வரை குறைக்க முடிவு செய்திருப்பதாக ஒன்றிய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இது எப்போது அமலுக்கு வருமென மக்கள் ஆர்வமாகக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.    வாகன நிறுத்துமிடங்களை விரிவுபடுத்தும் சென்னை மெட்ரோ—சென்னையில் மெட்ரோ ரயில்களுக்கு மக்களிடம் நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரிக்கிறது. பயணிகள் கூட்டம் அதிகரிப்பதால், மெட்ரோ ரயில் நிலையங்களின் வாகன நிறுத்துமிடங்களை மேம்படுத்த மெட்ரோ ரயில் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. முதற்கட்டமாக விமான நிலையம், மீனம்பாக்கம், நங்கநல்லூர் ரயில் நிலைய வாகன நிறுத்துமிடங்கள் விரிவுபடுத்தப்படுகின்றன.

Related Articles

Back to top button
Close
Close