fbpx
Others

சீன மருத்துவமனையின் கொடுமை..பொட்டலமாகசடலங்கள்

ஐயோ.. என்ன இது? பொட்டலம் பொட்டலமாக சடலங்கள்.. சீன மருத்துவமனையின் கொடுமை.. அதிர்ச்சி வீடியோ
  • பெய்ஜிங்: சரக்கு ரயிலில் ஏற்றுவதற்காக வைக்கப்பட்டிருக்கும் பார்சல்களை போல, சீனாவின் ஷாங்காய் மருத்துவமனையில் மனித சடலங்கள் குவியல் குவியலாக கிடத்தி வைக்கப்பட்டுள்ள வீடியோதான் தற்போது உலக நாடுகளை பீதியில் ஆழ்த்தியுள்ளது.சீன ஊடகங்கள் ஏதும் இந்த வீடியோவை வெளியிடாத நிலையில், வெளிநாட்டு பத்திரிகையில் பணிபுரியும் பெண் பத்திரிகையாளர் ஒருவர் துணிச்சலாக இந்த வீடியோ காட்சிகளைவெளியிட்டிருக்கிறார்.சீனாவில் கொரோனா பாதிப்பு பெரிய அளவில் இல்லை என அந்நாட்டு அரசாங்கம் கூறி வரும் நிலையில், இந்த வீடியோ பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது

 சீனாவில் மீண்டும் கொரோனா பரவல் வேகம் எடுத்திருப்பதுதான் உலகம் முழுவதும் ஹாட் டாப்பிக்காக மாறியிருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலவரத்தை போலவே, சீனாவில் இருந்து தென் கொரியா, அமெரிக்கா, ஜப்பான், பிரேசில் உள்ளிட்ட நாடுகளுக்கு கொரோனா தொற்று பரவியிருக்கிறது. சீனாவில் நிலவி வரும் இந்த சூழலால், உலகம் முழுவதும் மீண்டும் கொரோனா பரவுமா? மறுபடியும் பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு விடுமா? என்ற அச்சம் உலக மக்களை ஆட்டிப்படைத்து வருகிறது. இந்தியாவிலும் சீனாவில் பரவி வரும் உருமாறிய கொரோனா கண்டறியப்பட்டிருக்கிறது.நாளொன்றுக்கு 5000 பேர் மரணம்சீனாவில் தற்போது 5 வகை உருமாறிய கொரோனா வைரஸ்கள் பரவி வருவதாக தெரிகிறது. இந்த வைரஸ்களில் 3 வகை தொற்றுகள் மிகுந்த ஆபத்தை ஏற்படுத்தி வருவதாக தெரிகிறது. இன்றைய சூழலில், சீனா முழுவதும் நாளொன்றுக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றுக்கு உயிரிழந்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், சீனா இதுவரை அங்கு நிலவும் கொரோனா நிலவரம் குறித்து வாய் திறக்கவில்லை.. ஷாங்காய் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் எடுக்கப்பட்டிருக்கும் இந்த வீடியோவில், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் சடலங்கள் ஏதோ சரக்கு பார்சல்களை போல குவியல் குவியலாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த வீடியோவுக்கு கீழே, இது டிசம்பர் 24-ம் தேதி எடுக்கப்பட்ட வீடியோ எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.உலக நாடுகள் கோபம்

இந்த வீடியோ சர்வதேச ஊடகங்களில் வெளியாகி உலக நாடுகளை கடும் அச்சத்தில் ஆழ்த்தியிருக்கிறது. மேலும், சீனா மீது ஒருவித கோபத்தையும் இந்த வீடியோ ஏற்படுத்தி வருகிறது. 3 ஆண்டுகளுக்கு முன்பும் இதுபோன்றுதான் சீனாவில் கொரோனா பரவிய போது, அந்நாடு வெளியே எதையும் சொல்லவில்லை. முன்கூட்டியே எச்சரித்திருந்தால் அனைத்து நாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை எடுத்திருக்கும். கோடிக்கணக்கான மக்கள் இறந்திருக்கவும் மாட்டார். இந்நிலையில், தற்போதும் அதே அணுகுமுறையை சீன அரசு கடைப்பிடித்து வருவதற்கு பல்வேறு நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

Related Articles

Back to top button
Close
Close