fbpx
RETamil Newsஅரசியல்தமிழ்நாடு

களைகட்டியது போகி பண்டிகை;காற்றானது மாசு;அதனால் சென்னையில் விமான சேவை பாதிப்பு !

தமிழகத்தில் இன்று அதிகாலை முதலே போகி பண்டிகையை முன்னிட்டு வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்களை எரித்தும், மேளதாளங்களை அடித்தும்  பொதுமக்கள் உச்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

பழையன கழிதலும் , புதியன புகுதலும் என்று சொல்லும் வகையில் பொங்கலுக்கு முந்தைய நாள் இந்த போகி என்ற பண்டிகை கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டுதோறும் மார்கழி மாதத்தின் கடைசி நாளில் போகி என்ற பண்டிகை  கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த பண்டிகையின் போது  வீட்டை சுத்தம் செய்து, வீட்டில் உள்ள பழைய பொருட்களை எரிப்பதாகும் இந்த பழக்கம்  கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

அதே போல் இன்றும் இந்த போகி பண்டிகை தமிழகத்தில் உள்ள பொதுமக்களால் கொண்டாடப்பட்டது.

பொதுமக்கள் தங்கள் வீட்டில் இருந்த பழைய பொருட்களையும், பழைய பைகளையும், தேவையற்ற பொருட்களையும் எரித்து குழந்தைகளிடம் மேளத்தை கொடுத்து அடிக்க சொல்லியும் போகி பண்டிகையை  கொண்டாடினர்.

இந்த பண்டிகையில் எவரேனும் மாசு உண்டாக்கும் டயர், டியுப், பழைய பிளாஸ்டிக் , செயற்கை இழையால் தயாரிக்கப்பட்ட துணிகள், , ரசாயனம் கலந்த பொருட்கள் ஆகியவற்றை எரிக்கிறார்களா என்று தமிழக மாசு கட்டுப்பாடு குழுவைசேர்ந்தவர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

புகைமண்டலமாக தெரிந்த சென்னை ;

சென்னையில் போகி பண்டிகையால் காற்று மாசு அதிகரித்துள்ளது. இன்று காலை காற்றின் மாசு 243 பி.எம்.ஐ ஆக பதிவானது. சென்னையில் பனிமூட்டத்தாலும் , புகைமண்டலத்தாலும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.

புகைமண்டலத்தால் விமானங்கள் தாமதம்;

சென்னையில் போகி பண்டிகையை முன்னிட்டு ஏற்பட்ட காற்று மாசு மற்றும் புகை காரணமாக சென்னையில் விமான சேவை பாதிக்கப்பட்டது. பூனே , பெங்களூர், திருச்சி மற்றும் அந்தமான் ஆகிய இடங்களிலிருந்து வந்து செல்லும் விமானங்கள் 2 மணி நேரம் தாமதமானது.

Related Articles

Back to top button
Close
Close