fbpx
Others

தேனி மாவட்டத்தில் கனிம வளங்கள் இனி காணாமல் போகுமா.?

 தமிழ்நாடுதேனிமாவட்டத்தில் உள்ள கனிம வளங்கள் ( mines) சகலவிதபாதுகாப்புடன்அதிகாரிகள் மற்றும் ஆட்சியாளர்கள்   ஆசீர்வாதத்துடன் கொள்ளையோ ……கொள்ளை ??? தேனி மாவட்ட மக்கள் வாழ்வதா? சாவதா ? கேரள கனிம வள மாஃபியாக்களின் டாரஸ் லாரிகளினால் புலம்பும் 10-ற்கும் மேற்பட்ட கிராம மக்கள்…தேனி மாவட்ட நிர்வாகத்தை, கேரளா மற்றும் தமிழக கனிம வள மாஃபியாக்கள் “கமிஷன்வித்கரெப்சன்”மூலம்கோமாவில்வைத்திருக்கிறார்களா? என மாவட்ட மக்கள் மத்தியில் தற்போது பரவலாக பேசப்பட்டு வருகின்றனர் ! தேனி மாவட்டத்தில் உள்ள ஒரு சில குவாரிகளில் இருந்து நாளொன்றுக்கு 500-க்கும் மேற்பட்ட கேரளா கனரக டாரஸ் லாரிகளின் மூலம் கனிம வளங்களை எடுத்துக்கொண்டு குக்கிராமங்களது வழித்தடங்களில் சென்று அப்பகுதி மக்களை அச்சுறுத்தி வருவதோடு கிராம சாலைகள் அனைத்தும் முற்றிலும் சேதாரம் ஆகி வருகின்றது.! எடுத்துக்காட்டாக ஆண்டிபட்டி பகுதியில் இருந்து கனிம வளங்களை எடுத்துக் கொண்டு ஜங்கால்பட்டி வழியாக காமாட்சிபுரம் மற்றும் வேப்பம்பட்டி கிராமத்து சாலைகளை கடந்து சீலையம்பட்டியை தொட்டு சின்னமனூர் நோக்கி கம்பம் மெட்டு வழியாக நாள் ஒன்றுக்குநூற்றுக்கணக்கான கேரளா கனரக 10 சக்கர டாரஸ் லாரிகள் மூலம் தமிழகத்து கனிம வளங்களை கேட்பாரற்றுநாதியில்லாமல்ஆயிரக்கணக்கானடன்கணக்கில்வெட்டிஎடுத்து  செல்கின்றனர்..  இவ்வாறாக, கிராம வழித்தடங்களில் புற்றீசல் போல 24×7 நேரமும் உலா வரும் டாரஸ் லாரிகளினால் வேப்பம்பட்டி, காமாட்சிபுரம், எஸ். அழகாபுரி, ஜங்கால்பட்டி, வெங்கடாசலபுரம், சீலையம்பட்டி, சின்னமனூர் தற்போது போடப்பட்ட பைபாஸ் சாலை உள்ளிட்ட 10-ற்கும் மேற்பட்ட கிராமத்தில் மக்கள் வரிப்பணத்தில் கோடிக்கணக்கான செலவில் அமைக்கப்பட்ட தார் சாலைகள் முற்றிலும் பலத்த சேதம் அடைந்து விட்டது ! மக்களது வரிப்பணத்தில் மக்களின் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட தார் சாலைகளை முழுவதும் கேரளா மணல் மாஃபியாக்களின் டாரஸ் லாரிகளுக்கு நேர்ந்து விட்டு , அது முழுவதும் சேதாரம் ஆகிய பின்பு மறுபடியும் மக்கள் வரிப்பணத்தில் சாலைகள் அமைக்கப்படுவது என்பது எவ்விதத்தில் நியாயம். சாமானிய மக்கள் உங்களுக்கு வரிகளாக கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டுமா? மக்களின் நலன் காக்க எள்ளளவும் வாய்ப்பில்லை என்பது இதன் மூலம் தெள்ளத் தெளிவாகியுள்ளது. இந்த கிராமத்து சாலைகள் முழுவதும் சேதாரமாகி வருவதை நெடுஞ்சாலை துறை நிர்வாகம் தங்கள் பங்கிற்கு தாங்கள் எதிர்பார்த்ததை பெற்றுக் கொண்டுமெளனவிரதத்தில்  இருந்து வருகின்றனரா என்ற சந்தேக குற்றச்சாட்டும்எழுந்துவருகின்றது…மௌன விரதத்தில் இருந்து வரும் நெடுஞ்சாலைத் துறையினர் சாமானிய மக்கள் தங்களது பொறுப்பில் உள்ள சாலைகளை சேதப்படுத்தினால் இப்படித்தான் கண்டு (ம்) காணாமல் கோமா நிலையில் இருந்து வருவீர்களா..? என சேதாரமாகி வரும் தார் சாலைகளில் பயணிக்கும் பயணிகள் தங்களது பங்கிற்கு நெடுஞ்சாலை துறையினரிடம் கேள்வியை முன்வைத்துவருகின்றனர்.

தமிழக கனிம வளத்தை கேரள மாநிலத்திற்கு விற்பனை செய்வதன் மூலம் வருமானம் பெருகும் என்றால், கிராம வழித்தடங்களில் கோடிக்கணக்கான செலவில் மக்கள் நலனுக்காக அமைக்கப்பட்ட சாலைகள் முற்றிலும் சேதாரம் ஆகி வருவதற்கு தேனி மாவட்ட நிர்வாகம் தான் முழு பொறுப்பையும் ஏற்றுக் கொண்டாக வேண்டும்..? தேனி மாவட்டத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட டாரஸ் லாரிகள் மூலம் தினமும் கேரளாவுக்கு கனிம வள மாஃபியாக்கள் மூலம் சவுடு மண், கிராவல் மண், மலை மண், கொண்டு செல்லப்படுகின்றது ?இந்த 500-க்கும் மேற்பட்ட கேரள லாரிகள் நெடுஞ்சாலை வழியாக சென்றால் டோல்கேட்டிற்கு பணம் செலுத்த வேண்டி உள்ளதால், அடுத்து, தினமும் கனிம வளத்துடன் எத்தனை லாரிகள் செல்கின்றன என்ற வருமான வரி கணக்கும் டோல்கேட்டில் அமைக்கப்பட்டுள்ள கேமராவில் பதிவாகிவிடும்….இந்த டாரஸ் லாரிகளின் நடமாட்டத்தை டோல்கேட் நிர்வாகமும் ,அதனைச் சார்ந்த நெடுஞ்சாலைத்துறை நிர்வாகமும் கண்டு(ம்) கொள்வதே இல்லை.?ஆனால், சாலையோ இரு வழிச் சாலை, அந்த இரு வழிச் சாலையில் அரசு விதிகளை மீறி டோல்கேட் அமைத்தது பெரும் குற்றம். என்பது ஒரு புறம் இருக்க, சாமானிய வாகன ஓட்டிகளிடம் டோல்கேட் வசூல் என அனுதினமும் இந்த டோல்கேட் நிர்வாகம் வாகன ஓட்டிகளை கசக்கி பிழிந்து வருகின்றது ?தேனி மாவட்டத்தில் கிராமத்து வழித்தடங்களில் கேரள கனிம வள மாஃபியாக்களின் டாரஸ் லாரிகள் வலம் வருதல் விசயத்தில் மட்டும் டோல்கேட் நிர்வாகமும், சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை நிர்வாகமும் எதிர்பார்த்ததை பெற்றுக் கொண்டு அனைத்து துவாரங்களையும் அடக்கி வாசிக்கும் மௌன விரதப் போக்கை கடைபிடித்து வருகின்றது ஏன்?  அதனால், இந்த கேரளா டாரஸ் லாரிகள் தகுதியும், தரமும் இல்லாத குக்கிராமத்து சாலைகள் வழியாக சாரை சாரையாக கேரளாவுக்கு செல்வதால் கிராமப் பகுதி பொதுமக்கள் சொல்லவும் முடியாமல் , மெல்லவும் முடியாமல் “என்னத்த சொல்ல எங்க தலையெழுத்து அப்படி” என புலம்பிய படி வேதனை தெரிவித்து வருகின்றனர்.?இங்கு என் மக்களுக்கு குடிக்க பழைய கஞ்சியே இல்லையாம். ஆனால், எம் மக்கள் இவர்களுக்கு மட்டன் பிரியாணி உண்டதாக கப்பம் கட்ட வேண்டுமாம். அந்த முறையில் தான் உப்பார்ப்பட்டி டோல்கேட் நிர்வாகம் இயங்கி வருகின்றது எனக் கூறினால் அது மிகச் சரியாக பொருந்தும்.?கேரளா டாரஸ் லாரிகள் உட்பட பல நூறு வாகனங்கள் டோல்கேட்டிற்கு வருகை தராமலே பல குக்கிராமத்து சாலைகளை தேர்வு செய்து கள்ளத்தனமாக இது போன்ற கனரக வாகனங்கள் டோல்கேட் நிர்வாகத்தை ஏமாற்றி இயங்கி வருகின்றது என்பது நெடுஞ்சாலை துறைக்கும் டோல்கேட் நிர்வாகத்திற்கும் தெரியுமா…? மாறாக, தெரிந்தும் கண்டு (ம்) கொள்ளாதது போல் நடித்து கொண்டு வருகின்றனரா…? என டோல்கேட்டிற்கு பணம் செலுத்தும் மானமுள்ள வாகன ஒட்டிகள் தங்களது பங்கிற்கும் குற்றச்சாட்டுக்களை வைத்து வருகின்றனர் ?சாமானிய மக்கள் வரிப்பணத்தில் மக்கள் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்ட கிராமத்து வழித்தட ,தார் சாலைகள் அனைத்தும் தற்போது குண்டும் குழியுமாக பலத்த சேதாரம் ஆகி வருகின்றது ?இது பற்றி பொதுமக்கள் காவல்துறையில் புகார் அளித்தாலும் எடுபடவில்லை என்கிறார்கள். மாவட்ட ஆட்சியர் முதல் வருவாய் துறை வரை எந்த துறையில் புகார் அளித்தாலும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளது.?மேலும், கனிம வளத்துறையில் எத்தனை லோடு தினமும் எடுக்கப்பட வேண்டும் ? எவ்வளவு ஆழம் மற்றும் அகலத்திற்கு எடுக்கப்பட வேண்டும் ? என்ற கணக்கு எதுவும் கிடையாதாம். ஏன் ?……எதற்க்காக.?வானளவு அதிகாரம் படைத்தவர்கள் போல் தங்களது இஷ்டத்திற்கு கனிம வளங்களை கேரளாவிற்கு கொண்டு செல்லும் படலம் தொடர்ந்து அரங்கேறி வருகின்றது.இவற்றை யாரும் தடுக்கவோ அல்லது நடவடிக்கை எடுப்பார்களா என்று பார்த்தால்….?தேனி மாவட்டத்து கனிம வளங்களை அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள் முதல் கனிம வள கொள்ளையை கண்காணிப்பவர்கள் வரை துறை சார்ந்த ஒட்டு மொத்த உயர், இடை, கடை நிலை ஊழியர்கள் அத்துணை நபர்களும் ஒன்று சேர்ந்து மாதாமாதம் ,கேரள கனிம வள மாஃபியாக்கள் மூலமாக கிடைக்கக் கூடிய கமிஷன் வித் கரெப்ஷனுக்காக கருவுற்ற ஓர் தாயின் தாய்ப்பாலை வலுக்கட்டாயமாக கறந்து விற்பனை செய்வது போல தேனி மாவட்டத்தில் நடைபெற்றுவருகிறது……….இங்கே கொட்டி கிடக்கும் கனிம வளங்களை மேற்கண்டோர் கருவறுத்து வருகின்றனர் என தேனி மாவட்ட விவசாயபெருங்குடிமக்கள்குற்றச்சாட்டுவைத்துவருகின்றனர் இந்த பகுதியில் நடைபெறும் இந்த கனிம வளங்கள் கொள்ளை, விவசாய மொத்த நிலங்களையும் பாதிக்கும் இந்த கல் குவாரிகளை மூடவும், தவறும் பட்சத்தில் இவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று நடைபெற்ற பாரதிய விவசாய மக்களாட்சி தேனி மாவட்ட ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது….. ஆனால் இது வரை அதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை ஏன்……?……. எதற்காக??? ஏனெனில் இவர்கள் அனைவர்க்கும் இந்த மாமூலில் பங்கு உள்ளது போல் தெரிகிறது?பொது சொத்தை சுரண்டுதல், பொது சொத்தை சேதமாக்குதல், கிராம மக்களை 24×7 நேரமும் அச்சுறுத்தி வருதல், மக்களை குறிப்பாக பள்ளி மாணாக்கர்களைஉயிர்ப்பலிஅச்சத்தைஏற்படுத்துதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுத்தி வரும் கனிமவள மாஃபியாக்களின் டாரஸ் லாரிகளை கிராம வழித்தடத்தில் இயக்குவதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென என்று 10-ற்கும் மேற்பட்ட கிராம பொதுமக்கள், விவசாய பெருங்குடி மக்கள், பள்ளி மாணாக்கர்களின் நலன் கருதி பெற்றோர்கள் சமூக ஆர்வலர்களும், ஊடகவியலாளர்களும், தேனி மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்த வண்ணமாக உள்ளனர்…..ஆனால் மாவட்ட ஆட்சியரோ, மற்றும் மாவட்ட நிர்வாகமோ , கனிம வளத்துறை, ஆட்சியாளர்களோ கண்டும் காணாமல் இருந்து வருகின்றனர்..?மாவட்ட நிர்வாகம் செவி சாய்க்காது என தெரிந்ததே. ஏனென்றால் மாதம் பிறந்தால் பல இலட்சங்களை மாவட்டத்தின் முக்கியஸ்தர்களுக்கும் சில அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு மாமூல் போய்க் கொண்டு இருப்பதாக பொது மக்கள் பேசுகின்றனர்?உயிர்ப்பலி அச்சத்தில் 10-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், கிராமத்து சாலைகள் சேதாரம், பள்ளி செல்லும் மாணாக்கர்களுக்கு ஒரு வித உயிர்ப்பலி பதற்றம் எனும் பொதுமக்களின்குறைகளைபதிவுசெய்யவேண்டியதுஎங்களின்பொறுப்பு…நடவ.நடவடிக்கை எடுக்க வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பு..! விடியல் ஆட்சியில் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு விடியுமா? என்பதைபொறுத்திருந்து  பார்ப்போம்…!!! என்று தேனி மாவட்ட பொதுமக்கள் கோரிக்கைவைக்கின்றனர்..? ஆல் இந்தியாமீடியாஅசோசியேஷன்,யூனியன்ஆஃப்பிரஸ்மீடியாகம்யூனிகேஷன்  மாநில அமைப்புச் செயலாளர், பாரதிய விவசாய மக்களாட்சி மாநில ஊடகப் பிரிவு அமைப்பு துணைச் செயலாளர், தமிழக ரிப்போர்ட்டர்மாவட்டசெய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர், ISCUF – தேனி மாவட்ட மாநிலக் குழு உறுப்பினர் – அ.ந.வீரசிகாமணி.

 

Related Articles

Back to top button
Close
Close