fbpx
Others

கனிமொழிஎம்.பி.- ஆளுநருக்குகண்டனம்…..

நாள்தோறும் ஏதேனும் அவதூறுகளைப் பரப்பியவாறு மக்களாட்சிக்கு இடையூறு விளைவித்து வரும் ஆளுநர் ரவி, சிறிது நேரம் அமைதி காக்கவும் என்று கனிமொழி கூறியுள்ளார். திமுக துணை பொது செயலாளர் கனிமொழி எம்பி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’ என்ற நெறியில் வந்த தமிழ்நாட்டிற்கும் பிறப்பால் பேதம் கற்பிக்கும் சனாதனத்திற்கும் எந்தத் தொடர்பும் இருந்ததில்லை. வரலாறு முழுவதும் பிறரது அடையாளங்களைச் சிதைத்து தனதாக்கிக் கொள்வதைத் தான் சனாதனம் செய்து வருகிறது. அறிவியலுக்கு ஒவ்வாத புரட்டுகளை தவிர்த்து சனாதனத்திடம் வேறெதுவும் இருந்ததில்லை. தமிழ்நாடு என்னும் திராவிடப் பெருநிலம் அவற்றை ஒருநாளும் ஏற்றதுமில்லை!. நாள்தோறும் ஏதேனும் அவதூறுகளைப் பரப்பியவாறு மக்களாட்சிக்கு இடையூறு விளைவித்து வரும் ஆளுநர் ரவி, சிறிது நேரம் அமைதி காக்கவும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

Related Articles

Back to top button
Close
Close