fbpx
RETamil Newsஅரசியல்இந்தியாதமிழ்நாடு

கும்பமேளாவில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மாயம்;கதறும் உறவினர்கள் !

பிரயாக்ராஜில் கங்கை ,யமுனை, சரஸ்வதி போன்ற மூன்று நதிகளும் சங்கமிக்கும் இடத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை மகா கும்பமேளா நடைபெறுவது வழக்கம், அதேபோல் 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை அரை கும்பமேளா நடைபெறுவதும் வழக்கம். அதேபோல் அரை கும்பமேளா இவ்வாண்டு 15-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.கிட்டத்தட்ட 49 நாட்கள் நடைபெறும் இந்த கும்பமேளா விழா மார்ச் மதம் 4-ஆம் தேதி முடிவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கும்பமேளாவிழா மிகவும் விமர்சையானது என்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் கங்கையில் புனித நீராடி , பிரார்த்தனை செய்து வழிபடுவார்கள். இந்த விழாவின் போது எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் பலமாக செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மௌனியா அம்மாவாசையான நேற்று முன்தினம் கூட்ட நெரிசல் அதிகமாக இருந்தது , இந்த கூட்ட நெரிசலில் 50 ஆயிரம் பேர் காணாமல் போயியுள்ளதாக கூறப்படுகிறது. எவ்வாறு காணாமல் போனோர்களின் அறிவிப்பு கொடுக்கும் பகுதியில் ஏராளமானோர் கதறி அழுதபடி உள்ளனர். இதுவரை 18 ஆயிரத்தி 300 பேர்வரை காணாமல் போயுள்ளதாக வழக்கு பதிவுசெய்யப்பட்டுஉள்ளது என்று டிஐஜி கேபி சிங் தெரிவித்துள்ளார்.

போலீசாரின் உதவியுடன் இதுவரை காணாமல் போன 70 குடும்பத்தை சேர்ந்தவர்கள் அவர்களின் உறவினர்களுடன் சேர்த்து வைக்கப்பட்டுள்ளனர்.

இதுபோன்றே முந்தைய கும்பமேளாவில் காணாமல் போனவர்கள் பல ஆண்டுகளுக்கு பின்புதான் தங்களின் குடும்பத்துடன் ஒன்றிணைத்தனர். ஆனால் தற்போது தகவல் தொடர்பு முன்னேறியுள்ளதன் காரணமாக இந்த கும்பமேளாவில் தொலைந்து போனவர்கள் விரைவில் தங்களின் குடும்பத்துடன் ஒன்றிணைவர் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் காணாமல் போனவர்கள் பற்றிய விவரங்களை போலீசார் ஒலிபெருக்கி மூலமும் அங்கங்கே தெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறு கங்கை நதிக்கரையில் தொடர்ந்து 8 வாரங்கள் நடைபெறும் இந்த விழாவில் 15 கோடி பேர் புனித நீராடுவார்கள் என்று கருதப்படுகிறது.

Related Articles

Back to top button
Close
Close