fbpx
RETamil Newsதமிழ்நாடு

குழப்பத்தில் மாணவர்கள் 10-ஆம் வகுப்பு பொது தேர்வு நடைபெறுமா , நடைபெறாதா? – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

கொரோனா பாதிப்பு காரணமாக நாடெங்கும் ஊரடங்கு ஏப்ரல் -14-ஆம் தேதி வரை அமல்படுத்தப்பட்டிருந்தது. ஆனால் உயிர்கொல்லியாக கருதப்படுகின்ற இந்த கொரோனவைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதால் ஊரடங்கானது மே-3 -ஆம் தேதிவரை நீட்டிப்பதாக பிரதமர் மோடி மக்களுக்கு தெரிவித்தார்.

அதனால் நடைபெறஇருந்த 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தற்போது வரை நடைபெறவில்லை. ஆனால் கொரோனா மேலும் அதிகரித்து வருவதால் நிகழாண்டு 10-ஆம் வகுப்பு தேர்வுகள் நடைபெறுமா? இல்லையா ? என்ற சந்தேகம் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் நிலவி வருகிறது.

இந்த குழப்பத்தை தீர்க்கும் வகையில் தமிழகத்தில் 10-ஆம் வகுப்பு பொது தேர்வு கட்டாயம் நடத்தப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.தேர்வு எப்போது நடத்தப்படும் என்பது குறித்து மே 3 ஆம் தேதிக்கு பிறகு முடிவு செய்யப்படும். ஊரடங்கு முடிந்த பின்னர் தேர்வு அட்டவணை வெளியிடப்படும். ஓவ்வொரு தேர்வுக்கு இடையேயும் ஒரு நாள் விடுமுறை விடப்படும்.

மேலும் தனியார் பள்ளிகள் கட்டண வசூல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் ” என கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
Close
Close