fbpx
GeneralRETamil NewsTrending Nowதமிழ்நாடு

1 முதல் 9ம் வகுப்பு தேர்வு நடத்தியே தேர்ச்சியா..? தனியார் பள்ளிகளுக்கு கடும் எச்சரிக்கை

Private school conducting exams, association warning

சென்னை:

1 முதல் 9 ம் வகுப்பு வரை தேர்வு நடத்த திட்டமிட்ட பள்ளிகளுக்கு தனியார் பள்ளிகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகம் முழுவதும் கொரோனா காரணமாக தடுப்பு நடவடிக்கையாக மே 31 வரை ஊரடங்கு அமலில் இருக்கிறது. ஊரடங்கால் 1 முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தேர்வு நடைபெறவில்லை.

மற்ற வகுப்புகளை தவிர்த்து 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை மட்டும் நடத்துவது என்று அறிவிக்கப்பட்டுவிட்டது. அந்த தேர்வு ஜூன் 15ம் தேதி நடத்தப்படுகிறது.

ஆனால் 1 முதல் 9 வகுப்புகள் வரையிலான மாணவர்கள் தேர்வு இல்லாமலே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்நிலையில் சில தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு தேர்வு நடத்தியே தேர்ச்சி அளிக்கப்படும் என பெற்றோர்களுக்கு செல்போன் குறுஞ்செய்தி மூலம் தகவல் அனுப்பி இருக்கிறது.

இதுகு றித்து தனியார் பள்ளிகள் இயக்ககம் கடும் எச்சரிக்கையை வெளியிட்டு உள்ளது. அதில் அரசு அறிவித்தவாறு 1ம் வகுப்பு முதல் 9 வகுப்பு வரை மாணவர்களை தேர்வின்றி தேர்ச்சி அளிக்க வேண்டும்.

அதற்கு மாறாக மறைமுகமாக தேர்வு நடத்தக்கூடாது. தேர்வு நடத்தினால் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளது.

 

Tags

Related Articles

Back to top button
Close
Close