fbpx
RETamil NewsTrending Nowதமிழ்நாடு

திருவள்ளூரில் புதிய மருத்துவக்கல்லூரி: முதலமைச்சர் அடிக்கல்!

Chief minister edapaddi palanisamy medical college

சென்னை:

திருவள்ளூரில் அமையவுள்ள  புதிய அரசு மருத்துவ கல்லூரிக்கு முதல்மைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம், திருவள்ளூர் மாவட்டம் பெரும்பாக்கத்தில் ரூ.385.63 கோடியில் புதிதாக கட்டப்படவுள்ள அரசு மருத்துவக்கல்லூரி கட்டிடங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

தமிழக அரசு, மருத்துவக்கல்லூரிகள் இல்லாத மாவட்டங்களில் படிப்படியாக அரசு மருத்துவக்கல்லூரிகளை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில், 3 ஆண்டுகளில் புதுக்கோட்டை, கரூரில் அரசு மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்பட்டன.

ஈரோடு மாவட்டம் பெருந் துறையில் செயல்பட்டு வந்த ஐ.ஆர்.டி. மருத்துவக் கல்லூரியானது 2019-2020-ம் கல்வி ஆண்டு முதல் அரசு மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.

மேலும், மத்திய அரசின் நிதியுதவியுடன், 2019ம் ஆண்டில், ராமநாதபுரம், விருதுநகர், திண்டுக்கல், திருப்பூர், நாமக்கல், நீலகிரி, நாகப்பட்டினம், கிருஷ்ணகிரி, திருவள்ளூர், அரியலூர் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் 11 புதிய அரசு மருத்துவக்கல்லூரிகளை தொடங்க அதிமுக அரசு மத்திய அரசின் ஒப்புதலை பெற்று சரித்திர சாதனையை படைத்து உள்ளது.

இந் நிலையில்,சென்னை தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலி காட்சி மூலம், திருவள்ளூர் மாவட்டம் பெரும்பாக்கத்தில் ரூ.385.63 கோடியில் புதிதாக கட்டப்படவுள்ள அரசு மருத்துவக்கல்லூரி கட்டிடங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

திருவள்ளூர் ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகம் அருகில்  இந்த மருத்துவக் கல்லூரி அமைகிறது. நிகழ்ச்சியில், முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் க.சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Tags

Related Articles

Back to top button
Close
Close