பத்தாம் வகுப்பு தேர்வுகளில் மீண்டும் மாற்றமா? முதலமைச்சர் ஆலோசனை!
Chief minister edapaddi discussion

சென்னை:
பள்ளிகளை எப்போது திறப்பது, 10ம் வகுப்பு தேர்வை மாற்றலாமா? என்பது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
மார்ச்சில் நடைபெற இருந்த 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் கொரோனாவால் தள்ளி வைக்கப்பட்டன. ஜூன் முதல் தேதியிலிருந்து தேர்வுகள் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் ஊரடங்கு மே 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அடுத்த நாளே தேர்வுகள் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட, தேர்வுகள் வரும் 15ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டன.
இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறப்பது குறித்தும், 10ம் வகுப்பு தேர்வு மையங்கள் அமைப்பது குறித்தும் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
அதன் பிறகு தேர்வு மையங்கள் குறித்து பள்ளி திறக்கப்பட இருக்கும் நாள் குறித்தும் தகவல் வெளியாகும் என்று தெரிகிறது.















