fbpx
Others

அசாமில்முதல் வந்தே பாரத் ரயில்–மோடி நாட்டுக்கு அர்பணித்துள்ளார்.

அசாம் மாநிலத்தில் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் ரேந்திர மோடி இன்று தொடங்கி வைத்தார். இது நாட்டின் 18 ஆவது வந்தே பாரத் ரயில் சேவை ஆகும். இந்தியாவில் அதிவேக ரயில் சேவையை அமல்படுத்தும் வகையில் ஒன்றிய அரசு வந்தே பாரத் ரயில்சேவையைஅறிமுகப்படுத்தியது  வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட அதிவேக ரயில்களை ரயில்வே அமைச்சகம் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் அறிமுகம் செய்தது.    இதுவரை வந்தே பாரத் ரயில்கள் மூலம் பல்வேறு நகரங்கள் இணைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று மதியம் 12 மணிக்கு காணொளி காட்சி மூலமாக அசாமின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயிலை தொடங்கி வைத்தார். இந்த அதிநவீன ரயில் இப்பகுதி மக்களுக்கு வேகத்துடனும், வசதியுடன் பயணிக்க வழிவகுக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. அசாம் கவுகாத்தி- மேற்கு வங்கத்தின் புதிய ஜல்பைகுரி இடையே வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் தொடங்கி வைத்துள்ளார்.அசாம் கவுகாத்தி- மேற்கு வங்கத்தின் புதிய ஜபைகுரி இடையே வந்தே பாரத் ரயில் சேவை இயக்கப்படுகிறது. 411 கிலோ மீட்டர் தூரத்தை ஐந்தரை மணி நேரத்தில் கடக்கும் வந்தே பாரத் ரயில் வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படும் என்றும் புதிதாக மின்மயமாக்கப்பட்ட 182 கி.மீ ரயில் பாதையையும் பிரதமர் மோடி நாட்டுக்கு அர்பணித்துள்ளார். இதன் மூலம் இரண்டு இடங்களையும் இணைக்கும் தற்போதைய அதிவேக ரயிலுடன் ஒப்பிடும்போது இந்த ரயில் சுமார் ஒரு மணி நேர பயணத்தை மிச்சப்படுத்தும் என்று கூறப்படுகிறது.

Related Articles

Back to top button
Close
Close