fbpx
Others

தேனிமாவட்ட ஆட்சியருக்கு அருகாமையிலேயே இந்த கட்டண கொள்ளை…?

தமிழ்நாடு – தேனி மாவட்டம், தேனி – அல்லிநகரம் நகராட்சி நிர்வாகம் மக்களின் நலனுக்காக செயல்படுகிறதா ??? அல்லது தெரிந்தே நகராட்சி ஒப்பந்ததாரர்களின் பணத்திமிர் வெறியாட்டத்திற்கு வெள்ளைக்கொடி காட்டி வருகிறதா ??? தேனி மாவட்டம், தேனி புதிய பேருந்து நிலைய நகராட்சி கட்டண கழிப்பறைகளில் உச்சா போறதுக்கு 10 ஓவாயா..???வெறும் 10 ரூபாய் தானே என்று எளிதாக விட்டு விடுகிறோம். ஆனால் அந்த 10 ரூபாய் தான் முதல்வரின் நாற்காலிக்கு பெரும் ஆபத்தாகி ED உள்ளே வந்துள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும் மக்களே !!!இலவச பேருந்து பயணம் என்று மார்தட்டும் இதே தமிழகத்தில் கழிப்பறைகளில் உச்சா போறதுக்கு 10 ரூபாய் என்பது….இதுவும் பெருமைகளில் ஒன்று தானே..!தேனி புதிய பேருந்து நிலையத்தில் மதுரை செல்லும் நடைமேடையில் செயல்பட்டு வரும் கட்டண கழிப்பிடத்தில் உற்சாகமாக அல்ல ? அவசரத்திற்கு உச்சா போவதற்கு நகராட்சியின் அனுமதியுடன் 10 ரூபாய் என்று கொள்ளை கட்டணம்…… இவற்றையெல்லாம் யாரிடம் சொல்ல !!!தேனி – அல்லிநகரம் நகராட்சி நிர்வாகம் மக்களின் நலனுக்காக செயல்படுகிறதா? அல்லது அதற்கு மாறாக, நன்கு தெரிந்தே ஒப்பந்ததாரர்களின் பணத்திமிர் வெறியாட்டத்திற்கு , 10 ரூபாய் கொள்ளை கட்டணத்திற்கு வெள்ளைக்கொடி காட்டி வருகிறதா?பேருந்து நிலையத்தை கட்டி வைத்துக் கொண்டு, அதற்குரிய முகப்பு பாதைகூட கிடைக்காமல் வனத்துறையிடம் மல்லுக்கட்டி டெல்லி வரை சென்று மறைந்த அம்மையார் ஜெயலலிதா அவர்களின் கடும் முயற்சியால் கொண்டுவரப்பட்ட புதிய பேருந்து நிலையத்தில் நகராட்சி நிர்வாகத்தின் துணையுடன் ஒப்பந்ததாரர் எல்லை மீறும் அராஜகம்.!ஏய் தேனி -அல்லிநகரம் நகராட்சி நிர்வாகமே ! மக்களின் நலனுக்காக நிர்வாகத்தை நடத்துவதற்கு உங்களுக்கு திராணி இல்லை என்றால் நிர்வாகத்தை கலைத்துவிட்டு நீங்களெல்லாம் 100 நாள் வேலைக்கு செல்லலாமே…???மாவட்ட நிர்வாகமே..!!!. தேனி – அல்லிநகரம் நகராட்சி நிர்வாகமே..!!!. நிர்வாகத்தில் வலம் வரும் நீங்கள் எல்லாம் அவசரத்திற்காக இது போன்ற கழிப்பறைகளுக்கு சென்றால் தானே உங்களுக்கு இவற்றின் அருமை, பெருமைகளெல்லாம் தெரியவரும்!இது போன்று கொள்ளையடிக்கும் ஒப்பந்ததாரர்களுக்கு கட்டணக் கழிப்பிடத்தை தாரை வார்க்க தெரிந்த அல்லிநகரம் நகராட்சி நிர்வாகத்திற்கு , சாமானிய மக்களின் நலனுக்காக இலவச கழிப்பிடத்தை மக்களின் பயன்பாட்டிற்காக செயல்படுத்திட துப்பு இல்லையா…? எனக் காரித்துப்பி வருகிறார்கள் பொது மக்கள் !இந்த கட்டண கழிப்பிடத்தின் வாயிலாக புதிய பேருந்து நிலையத்தை பயன்படுத்தும் மாவட்ட மக்கள் நாள் ஒன்றுக்கு தோராயமாக 500 பேர் கட்டண கழிப்பிடத்தை பயன்படுத்தி வருகிறார்கள் என்றால் 500×10ரூ = நாள் ஒன்றுக்கு 5000 ரூபாய் …….மாதம் 30நாள்x ரூ.5000= மாதம் ஒன்றுக்கு ஒன்றரை இலட்சம் ரூபாய்……மாதம் ஒன்றரை இலட்சம்……நம் தேனி மாவட்ட வருவாய் அலுவலருக்கே அவ்வளவுதான் ஒரு மாத சம்பளமே ! ஆனால் மாவட்ட வருவாய் அலுவலரின் ஒரு மாத சம்பளத்தை அசால்டாக வாரிக்குவிக்கின்றனர் கட்டண கழிப்பிட ஒப்பந்ததாரர்கள்!இந்த அளவிற்கு மெகா வசூல் கொள்ளையில் ஈடுபடும், இந்த கட்டணக் கழிப்பிடத்தில் போதுமான சுகாதார வசதி உள்ளதா? என்றால், இல்லை ! இந்த சுகாதார வசதி எந்த பெட்டிக்கடையில் கிடைக்கும் என்கின்ற நிலை தான். ………இந்த சுகாதார விசயத்தை அல்லிநகரம் நகராட்சி நிர்வாகமும் கண்டு(ம்) கொள்வதில்லை.!ஒரு வருடத்திற்கு 12x ரூ.ஒரு இலட்சத்து 50 ஆயிரம்= ஒரு வருடத்திற்கு 18 இலட்ச ரூபாய்.05 வருடத்திற்கு 90 இலட்ச ரூபாய் கொள்ளை பணம் நகராட்சி நிர்வாகத்தின் ஆணையர் முதற்கொண்டு ,யார் யாருக்கு இந்த பங்கு பிரித்து கொடுக்கப்படுகிறது.???ஆக, மொத்தத்தில் கர்னல் ஜான் பென்னிகுக் புதிய பேருந்து நிலைய விசயத்தில் கோமா நிலைக்கு சென்ற அல்லிநகரம் நகராட்சி நிர்வாகத்தால் இலவச கழிப்பிட வசதி இல்லை என்ற நிலை இல்லை. ஆனால் இருக்கு …….. ஆனால் இல்லை ?புதிய பேருந்து நிலையத்தில் பேருந்து நிலைய பயணிகள் மற்றும் பொதுமக்களின் நலனுக்காக இலவச கழிப்பிடத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தால் ஒப்பந்ததாரர் எப்படி பணத்தில் கொழிப்பார்? அவரால் நாம் எப்படி பணம் பார்க்க முடியும் என்ற நிலையில் தான் நகராட்சி நிர்வாகம் மிகவும் மெத்தனமாகவும், மிக ஆர்வத்துடனும் இருந்து வருகிறது.?இதை சாதகமாக்கிய ஒப்பந்தம் எடுத்த கட்டண கொள்ளைக்காரர்கள் அவசரம் என்றால் அது எவனாய் இருந்தாலும் எங்களிடத்தில் தான் வந்தாக வேண்டும்.?எவன் எக்கேடு கெட்டு, நாசமாய் போனால் நமக்கு என்ன? 10 ரூபாய் வாங்கிக் கொண்டு பாதாளக்குழியில் தள்ளி விடுவோம் என்ற நிலையில் கட்டணக் கழிப்பிடத்தை செயல்படுத்தி வருகின்றனர் !!!மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஓரு 03 நிமிடத்தை கடந்தாலே..இந்த புதிய பேருந்து நிலையம் வந்துவிடும்.! அப்படி இருக்கும் போது…இவ்வாறான சூழலில் மாவட்ட ஆட்சியருக்கு அருகாமையிலேயே இந்த கட்டண கொள்ளை நடைபெறுவது மாவட்ட நிர்வாகத்திற்கு வெட்கக்கேடான செயலாகும்.!!! என்பதை மாவட்ட ஆட்சியர் உணர்ந்து பேருந்து நிலைய பயணிகளின் அன்றாட மற்றும் குறிப்பாக அவசரத்தின் அவலங்களை போக்க உடனடியாக தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.???அல்லிநகரம் நகராட்சி நிர்வாகத்தை தொடர்ந்து, இந்த விசயத்தை கண்டு(ம்) கொள்ளாமல் இருந்து வரும் தேனி மாவட்ட நிர்வாகம் வெட்கித் தலை குனிய வேண்டிய செயலாகும்.!!!கர்னல் ஜான் பென்னிகுக் புதிய பேருந்து நிலையத்தில், பேருந்து நிலைய பயணிகள் அவசரத்திற்கு சென்று வரும் கழிப்பிடம் விசயத்தில் , தனிப்பட்ட ஒப்பந்ததாரரின் கூடுதலான கட்டணக் கொள்ளையை கட்டுக்குள் கொண்டு வந்து பேருந்து நிலைய வளாகத்தில் இலவச கழிப்பிடத்தை சுகாதாரத்தோடு செயல்படுத்த வேண்டுமென தேனி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், பத்திரிகை ஊடகங்களும் கோரிக்கை வைக்கின்றனர் ???………….ஆல் இந்தியா மீடியா அசோசியேஷன், ISCUF – மாநிலக் குழு உறுப்பினர், யூனியன் ஆஃப் பிரஸ் மீடியா கம்யூனிகேஷன் மாநில அமைப்புச் செயலாளர், அகில இந்திய விவசாய அமைப்பின் மாநில ஊடகப் பிரிவு தலைவர், தமிழக ரிப்போர்ட்டர் தினப் பத்திரிகை மாநிலச் செய்தியாளர், அரசு செய்தி மாவட்ட செய்தியாளர் – அ.ந.வீரசிகாமணி

Related Articles

Back to top button
Close
Close