வெறி நாய் கடி– வடமாநில இளைஞர் கழுத்தறுத்து தற்கொலை !
:கோவை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரியில் வடமாநிலத்தை சேர்ந்த ராம்சந்தர் என்பவர் வெறிநாய் கடித்ததால் 11.03.2025 அன்று காலை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்தார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவருக்கு ரேபிஸ் நோய் தொற்று இருப்பதை கண்டறிந்தனர்.இந்நிலையில் அவர் உடனடியாக வெறிநாய்கடி சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். மதியம் அவர் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிகிச்சை பெற்று வந்த கட்டிலில் கட்டி வைத்து மருத்துவர்கள் கண்காணித்து வருந்தனர். இருப்பினும் அவர் கட்டுகளை அவிழ்த்து விட்டு அந்த வார்டில் இருந்த கண்ணாடியை உடைத்து அங்கும் இங்கும் ஓடியுள்ளார், இதனால் அதிர்சிசயடைந்த மருத்துவமனை நிர்வாகம் காவல் மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளது. அவர்கள் வருவதற்குள் அந்த நபர் தன்னை தானே கண்ணாடியால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்துகொண்டார். இறந்த நபரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக அதே மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலை செய்துகொண்ட காரணத்தினை ஆய்வு செய்து வருகின்றனர். இது குறித்து கோவை அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரி டீன் நிர்மலா கூறுகையில் இந்த நபர் சிகிச்சைக்காக இன்று 11.03.2025 வந்த பொழுது இவரின் நடவடிக்கைகள் ரேபிஸ் நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது போல் தெரிந்ததும், உடனடியாக அந்த வார்டில் இவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. மேலும் அவருக்கு நோயின் தீவிரத்தால் தொடர்ந்து அவருக்கு சிகிச்சையளிக்க முடியவில்லை. ஜன்னலை உடைத்து அந்த கண்ணாடியால் தற்கொலை செய்துகொண்டார். அவரின் தற்கொலை முயற்சிக்கான காரணம் பிரேதப்பரிசோதனைக்கு பிறகே உறுதியாக தெரியவரும் இவ்வாறு அவர் கூறினார்.
கோவை மாவட்ட நிருபர்
க. அஜித் குமார்