Others
ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த நபர்கைது..
பழனி அருகே ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த நபர் கைது, 1150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
திண்டுக்கல் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை ஆய்வாளர் சுகுணா அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் சார்பு ஆய்வாளர் ராதா காவலர்கள் காளிமுத்து, கணேஷ் உள்ளிட்டோர் கொண்ட தனிப்படையினர் பழனி, அடிவாரம், மதனபுரம் பகுதியில் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது அப்பகுதியை சேர்ந்த பழனிச்சாமி மகன் மனோகர்(60) என்பவர் கள்ளத்தனமாக ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருப்பது தெரியவந்ததை தொடர்ந்து போலீசார் மனோகர்,வீட்டில் சோதனை நடத்தியபோதுஅங்கு மூட்டைகளில் 1150 கிலோ ரேஷன் அரிசி பதுக்கப்பட்டிருந்தது தெரிந்தது. அதை போலீசார் பறிமுதல் செய்து மனோகரனை கைது செய்து வழக்கு பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.