fbpx
Others

செங்குன்றம்வட்டாரநாடார் இளைஞர் அணி—சிறப்பு செய்தி.

செங்குன்றம்வட்டாரநாடார் இளைஞர் அணி நடத்தும் காமராஜர் இலவச கண் மருத்துவமனையில் ரூ. 14 இலட்சம் செலவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள மருத்துவ இயந்திரத்தின் துவக்க விழா இளைஞர் அணி தலைவர் ஜெ.பால்ராஜ் தலைமையில் நடைபெற்றது.செயலாளர் பி.ராஜேஷ், எஸ்.சுந்தரமூர்த்தி, கௌரவ ஆலோசகர் ஆர்.செல்வகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாதவரம் சட்டமன்ற உறுப்பினர். மாதவரம். எஸ்.சுதர்சனம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மருத்துவ இயந்திரத்தை துவக்கி வைத்து, கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு மருத்துவமனை சார்பில் வழங்கப்பட்ட கண் கண்ணாடியையும், பொது மருத்துவமனையில் உள்ள கர்ப்பிணி தாய்மார்களுக்கு குழந்தைகள் கிட்ஸ் சை வழங்கினார்.செங்குன்றம் பேரூராட்சி தலைவர் தமிழரசி குமார், துணைத்தலைவர் ஆர்.இ.ஆர். விப்ரநாராயணன், முன்னாள் பேரூராட்சி துணைத்தலைவர். இரா.ஏ.பாபு, மற்றும் நாடார் சங்க மூத்த முன்னோடி எல்.தாமஸ்நாடார், இளைஞரணி துணைத்தலைவர்கள் ஏ.பி.ஆர். செல்வம், டி.சதீஷ்குமார், துணைச் செயலாளர்கள் வி.பொன்னுவேல், ஜெ.ஜோதிமணி, செயற்குழு உறுப்பினர்கள் பி.ராஜா, பி.காமாட்சி ராஜன், ஆர்.எஸ். கந்தசாமி (எ) குரு, எம்.சேர்மராஜன், என்.ராஜ்குமார், ஆர்.ஆனந்தசீனிவாசன், ஜெ.பிரபாகரன், பி.தர்மலிங்கம், எஸ்.கோகுல்ராஜ், எஸ்.சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Related Articles

Back to top button
Close
Close