RETamil Newsஇந்தியா
காதலிக்க மறுத்ததால் காதலிக்கு துப்பாக்கி சூடு ; வேடிக்கை பார்த்த மக்கள்

உத்திரபிரதேச மாநிலம் யமுனா நகரை சேர்ந்தவர் ஜூலி.இவர் அங்குள்ள ஒரு பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில் அப்பகுதியை சேர்ந்த திபு என்ற இளைஞன் ஒருதலையாக காதலித்து வந்தான். ஜூலி அந்த இளைஞனின் காதலை ஏற்கவில்லை. அதனால் ஆத்திரம் அடைந்த திபு ஜூலியை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான் . நான்கு குண்டுகள் பாய்ந்தநிலையுள் கீழே விழுந்த ஜூலி தன்னை காப்பாற்றுமாறு கூறியுள்ளார் ஆனால் சுற்றியிருந்த பொது மக்கள் அந்த காட்சியை வீடியோ பிடிப்பதிலேயே கவனமாக இருந்துள்ளனர்.
அந்த ஜூலியோ சிறிது நேரத்திலேயே சுயநினைவை இழந்துள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவி வருகின்றது.















