fbpx
Others

மோடி, டிரம் ஒப்பந்தம் –ராகுல் காந்தி கமென்ட்……..

பிரதமர் மோடி-டொனால்ட் டிரம்ப் சந்திப்பு: கரடி அணைப்பு, கைகுலுக்கல் முதல்  கட்டைவிரல் வரை | கேமராவில் சிக்கிய முக்கிய தருணங்கள் | இன்றைய ...அமெரிக்கா சொல்லும்படி ஒப்பந்தம் போடாமல் போனால் இந்திய வணிகர்கள் பாதிக்கப்படுவார்கள். ஒப்பந்தம் போடப்பட்டால் அமெரிக்கா இழுக்கும் இழுப்புக்கெல்லாம் இந்தியா வர வேண்டி இருக்கும். சுயமரியாதையை பாதுகாப்பதா? அல்லது வர்த்தக உறவை பாதுகாப்பதா? என்பது தற்போது எழுந்திருக்கும் கேள்வி. இப்படி இருக்கையில்தான் இந்திய அதிகாரிகளும், அமைச்சர்களும் வர்த்தகம் குறித்து பேசி வருகின்றனர். “அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் முழுமையாக இறுதி செய்யப்பட்டாலும், அது தேசிய நலனுக்கு உகந்ததாக இருந்தால் மட்டுமே இந்தியா ஏற்கும். எப்போதுமே தேசிய நலனுக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். இதன் அடிப்படையில் ஒப்பந்தம் ஏற்பட்டால், வளர்ந்த நாடுகளுடன் ஒப்பந்தம் செய்ய இந்தியா எப்போதும் தயாராக உள்ளது” என்று வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் கூறியிருந்தார். இதையடுத்துதான் ராகுல் காந்தியின் கமென்ட் வந்திருக்கிறது.அதாவது, “பியூஷ் கோயல் என்ன வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளட்டும். நான் சொல்வதை குறித்துக்கொள்ளுங்கள். டிரம்ப் விதிக்கும் காலக்கெடுவுக்கு மோடி பணிந்து போவார்” என்று கூறியுள்ளார். பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நிலவும் பதற்றத்தை தணிக்க டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள் குறித்து பிரதமர் மோடி மௌனம் காப்பது ஏன் என்று காங்கிரஸ் கேள்வி எழுப்பி வருகிறது. இந்த நிலையில் ராகுல் காந்தியின் இந்த கருத்து கவனம் பெற்றிருக்கிறது. பின்னணி இதுதான் இந்தியாவும் மற்ற நாடுகளை போலநிரூபியுங்கள்': தேர்தல் ஆணையத்தின் கையொப்பமிடாத மறுப்புக்குப் பிறகு ராகுல்  காந்தி மோசடி குற்றச்சாட்டுகளை இரட்டிப்பாக்கினார் - தி வயர் அமெரிக்காவுடன் வர்த்தகம் செய்து வந்தது. ஆனால் டிரம்ப் அமெரிக்க அதிபராக தேர்வான நிலையில், திடீரென வரி தொடர்பாக ஓர் அறிவிப்பை வெளியிட்டார். அதாவது அமெரிக்க பொருட்களுக்கு மற்ற நாடுகள் எவ்வளவு வரியை விதிக்கிறதோ அவ்வளவு வரியை நாங்களும் போடுவோம்என்றுபேசியிருந்தார். அமெரிக்க கரன்சியும், மற்ற நாடுகளின் கரன்சியும் ஒன்றா? இதன் மதிப்பு சமாக இருக்கிறதா? இல்லை என்று தெரிந்தும் ஏன் டிரம்ப் இப்படி வரியை போடுகிறார் என்று பலரும் கேள்வி எழுப்பினர்.கேள்விகளை லெப்ட் ஹான்டில் டீல் செய்த டிரம்ப், அதெல்லாம் என்ன சொன்னாலும் முடியாது. வரியை போட்டே தீருவேன் என்று சொல்லி சகட்டு மேனிக்கு வரியை விதித்தார். வரி காரணமாக இந்தியா கடுமையாக பாதிக்கப்பட்டது. அதாவது அனைத்து பொருட்களுக்கும் அடிப்பயைாக 10% வரியை அமெரிக்கா போட்டிருக்கிறது. இது தவிர, 26% கூடுதல் வரியும் போடப்பட்டது. இதனால் இந்தியாவுக்கு மொத்த வரி 36% ஆக உயர்ந்தது. விமர்சனங்கள் எழுந்ததாால் 26% வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். அவர் அறிவித்த 90 நாட்கள் கெடு, ஜூலை 9ம் தேதியுடன் முடிவடைகிறது. இப்போது அமெரிக்க பொருட்களுக்கான வரியை இந்தியா குறைக்க வேண்டும். அல்லது, கூடுதல் வரியுடன் வர்த்தகத்தை தொடர வேண்டும். மட்டுமல்லாது ரஷ்யாவுடன் அன்னம் தண்ணி பழகுவோருக்கு 500% வரி போடுவோம் என்று டிரம்ப் கூறி வருகிறார். நாம் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறோம். இதனால் இந்தியாவுக்கும் அச்சுறுத்தல் உள்ளது. இப்படியான சூழலில் இந்தியா என்ன முடிவெடுக்கப்போகிறது என்பதுதான் எதிர்பார்ப்பு.

Related Articles

Back to top button
Close
Close