fbpx
Others

மோடியின் மூன்றாம் ஆட்சியில் சவால்கள் & மாற்றங்கள்…?

இந்தியத்தேர்தல்எதிர்பாராதமாற்றத்தைஏற்படுத்திவிட்டுச் சென்றிருக்கிறது. 2014, 2019 தேர்தல்களுக்குப் பிறகு அமைந்தது பாஜக அரசாங்கம். தற்போது அமைய இருப்பதுபாஜகதலைமையிலானகூட்டணிஅரசாங்கம்.இதுதான்அந்தச்சிறியமாற்றம்.இருப்பினும்,73வயதுநரேந்திரமோடிதான்இனியும்பிரதமர்.ஆளும்தரப்பு ஒரேயடியாக வீழ்ந்துவிட்டதென எதிர்த்திசையில் இருந்து குரல் எழுந்தாலும், முரட்டுக்காலில் முனையொடிந்த முள் ஒன்று குத்தியதைப் போன்றதொரு நிகழ்வைத்தான் தேர்தல் முடிவு ஏற்படுத்தி உள்ளதாக நடுநிலையாளர்கள் பார்க்கிறார்கள்.
தோல்வியிலும்வெற்றிஎன்பதுநாடுமுழுவதும்நிகழ்ந்துள்ளது.பாஜகவுக்குதனிப்பெரும்பான்மைகிடைக்காவிடினும் அக்கட்சி வழிநடத்தும் என்டிஏ கூட்டணி 22மாநிலங்களில் பெரிய வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.குறிப்பாக,தென்னிந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் என்டிஏ கூட்டணி அதிக வாக்குகளை அள்ளி சாதனை படைத்துள்ளது. தமிழ்நாட்டில்கூட திமுக கூட்டணியின் வாக்குகள் 5.6%, அதிமுக கூட்டணியின் வாக்குகள் 7.7% சரிந்துவிட்ட நிலையில் பாஜகவுக்கு மட்டும் 11.24% வாக்குகள் கிடைத்துள்ளன. 9 தொகுதிகளில் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தைப் பிடித்து தாமரையைத் தலைக்குமேல் தூக்கிப் பிடித்துள்ளது அக்கட்சி.நாடளாவிய வாக்கு எண்ணிக்கையில் ஆளும்கட்சியின் வாக்குகள்சரிந்தாலும்அரசியலுக்குஅப்பாற்பட்டு,இந்தியாவின்நிலைத்தன்மையையேஉலகநாடுகள்உற்றுநோக்குகின்றன.இந்தியாவுக்குள்பயங்கரவாதச்செயல்கள்ஊடுருவாமல்இருக்கஅஞ்சாமலும்கண்துஞ்சாமலும்அரசாங்கம்பார்த்துக்கொள்கிறது. 2019 புல்வாமா தாக்குதல் முறியடிப்பை அதற்கு உதாரணமாகச் சொல்லலாம். அதேபோல, ஆட்சிபுரிந்த பத்தாண்டுகளில் எந்த ஒரு நாட்டுடனும் பகைமைப் போக்கை இந்தியப் பிரதமர் கடைப்பிடித்தது இல்லை.ஒரு நாட்டில் முதலீடு செய்வதற்கும் அதனுடன் வர்த்தகம் புரிவதற்கும் அமைதியைத் தழுவிய பாதுகாப்புஅங்குநிலைத்திருப்பது அவசியம். அப்படி ஒரு நிலை இந்தியாவில் தொடர்ந்துநீடிக்கும்என்றுஉலகநாடுகள்இப்போதும்நம்புகின்றனமோடிமூன்றாவதுமுறைவெற்றிபெற்றிருப்பதுவரலாற்றுச்சாதனைஎன்றுநமதுபிரதமர்லாரன்ஸ்வோங்வாழ்த்திஇருக்கிறார்.இந்தியாவுடனானபங்காளித்துவஉறவைஇன்னும்வலுப்படுத்தமோடியுடன்இணைந்துபணியாற்றஇருப்பதாகவும்வோங்தெரிவித்துஉள்ளார்.சிங்கப்பூரிலுள்ள இந்தியத் தூதரகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, இந்தியாவின் எட்டாவது பெரிய வர்த்தகக் கூட்டாளி சிங்கப்பூர். 2022-23ஆம் ஆண்டில் இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகம் USD35.59 பில்லியனைத் தொட்டது. இது 2021-2022ஆம் ஆண்டைக் காட்டிலும் 18.2% வளர்ச்சி. சிங்கப்பூருக்கான இந்தியாவின் ஏற்றுமதி 7.5% வளர்ந்தாலும், அதைக்காட்டிலும் இந்தியாவுக்கான சிங்கப்பூரின் ஏற்றுமதி 24.4% அதிகரித்து உள்ளது. உறவின் நெருக்கம் இருதரப்பு வளர்ச்சியை வளர்க்கிறது. சிங்கப்பூர்-இந்தியா அரசதந்திர உறவின் 50ஆண்டு விழா அடுத்த ஆண்டு கொண்டாடப்பட உள்ள வேளையில் இந்த நெருக்கம் இன்னும் அதிகரிக்கும் என்றே எதிர்பார்க்கலாம்.“மோடிக்கு உலக அளவில் எதிரிகள் இல்லை; எல்லா எதிரிகளும் உள்நாட்டில்தான் இருக்கிறார்கள்,” என்று அமெரிக்காவின் மூத்த அரசியல் பகுப்பாய்வாளர் இயன்பிரெம்மர்அண்மையில்கூறியதுசமூகவலைத்தளங்களில் அதிகமாக பகிரப்பட்டது. அதில் ஓரளவு உண்மை இருக்கத்தான் செய்கிறது.‘அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்’அரசாங்கத்தை ஆதரிக்கும் குழுவினர் எந்த அளவுக்கு நேர்மையாக இருக்க வேண்டும் என்பதை இந்தக்குறள்தெளிவுபடஉரைக்கிறது.தன்னைஆதரிக்கும்கூட்டணிக்கட்சியினர்நேர்மைதவறுகிறார்களாஎன்பதைக்கண்காணிப்பதும் காலை வாரிவிடத் தயாராகும் கட்சிகளை அடையாளம் கண்டு சரிசெய்வதும் மோடியின் அரசாங்கம் முதுகில் சுமக்கவிருக்கும் சவால்கள்.வரும் ஐந்தாண்டுகளும் முன்னர் இருந்ததைப்போலவே வெளிச்சமாக இருக்குமா என்பது பலரது கேள்வி. எந்த ஒரு திட்டத்தையும் சட்டத்தையும் இயற்ற கூட்டணிக் கட்சிகளின் தயவு இனிமேல் தேவைப்படும், முன்னர்போல ஒரேமூச்சில் எதையும் செயல்படுத்திவிட இயலாது என்பதன் சாயல்தான் அந்தக் கேள்வி.ஆதரவுக்கு ஈடாக அமைச்சர் பதவி என்னும் பண்டமாற்று முறையில் அமைகிற கூட்டணி ஆட்சி என்பது எரிஎண்ணெய்யில் ஊறிய திரி போன்றது. நெருப்பில் பட்டுவிடாமல் பத்திரமாக பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும். அதேநேரம் பாஜக அரசும் தனது போக்கில் சில திருத்தங்களைச் செய்ய வேண்டி உள்ளது. குறிப்பாக, தனிமனிதனின் அத்தியாவசியங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். அதிகரிக்கும் விலைவாசி, வேலையின்மை போன்ற சிரமங்களுக்குத் தீர்வுகண்டு அனைவருக்கும் சரிசமமான கல்வி வாய்ப்பை அளித்தால் வரும் நாள்கள் இந்தியாவுக்கு வரமாகவே இருக்கும்.

 

Related Articles

Back to top button
Close
Close