முத்தமிழ் அறிஞர் கலைஞர்ஆறாமாண்டு நினைவேந்தல்..
தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவருமான முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் ஆறாமாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி கடலூர் மேற்கு மாவட்ட திமுக கழக செயலாளர்,உழவர் நலத்துறை அமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில்,மாவட்ட கழக பொருலாளர் சின்னவரின் ஆலோசனைபடி பரங்கிப்பேட்டை அகரம் பெரியமதகுவில் கமலிடிரேடர்ஸ்உரிமையாளர்க.இராமர்அவர்களின்தலைமையில்நடைபெற்றது. நிகழ்ச்சியில் மாவட்ட துனை செயலாளர் வழக்கறிஞர் சக்திவேல்,முன்னாள் வார்டு கவுன்சிலர்கள்இராமலிங்கம்,வினோபா,முன்னாள்நகரசெயலாளர்சரவணன் மோட்டார் வாகன ஓட்டுனர் சங்க தலைவர் செல்வ.இரமேஷ்,மு.மாணவரணி அமைப்பாளர் மகேஷ்,கரிகுப்பம் கிளை செயலாளர் முருகன்,தோப்பிருப்பு கிளை செயலாளர் திருப்பதி,புதுகுப்பம் கிளை செயலாளர் மணி மற்றும் திமுக நிர்வாகிகள் பழனி,ஐயப்பன்,பாண்டியன் ஆகியோர் கலைஞரின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.இதில் ஏராளமான கட்சியினருடன் பொது மக்களும் கலந்து கொண்டனர்.இறுதியாக கலந்து கொண்ட அனைத்து பொதுமக்களுக்கும் உணவு வழங்கப்பட்டது.