Others
முதல்வர்வரும்பாதையில்பைக்கில் குறுக்கே புகுந்த இன்ஜினியர்…..
முதல்வர் கான்வாய் வரும் போது போலீசாரின் தடையை மீறி பைக்கில் உள்ளே புகுந்து இன்ஜினியருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. சென்னை தலைமை செயலகத்தில் நேற்று சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டுவிட்டு நேற்று மதியம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது முகாம் அலுவலகத்திற்கு திரும்பினார்.இதனால் தலைமை செயலகம் முதல் முதல்வரின் முகாம் அலுவலகம் வரை பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முதல்வர் சரியாக 1.35 மணிக்கு சி.பி.ராமசாமி சாலை பீம்மண்ணா கார்டன் சாலை சந்திப்பு அருகே வரும் போது, சில நிமிடங்கள் முன்பு வாலிபர் ஒருவர் போலீசாரின் தடையை மீறி முதல்வர் கான்வாய் வரும் சாலையில் பைக்கில் மின்னல் வேகத்தில் சென்றார்.இதை கவனித்த பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனே பைக்கில் கான்வாய் குறுக்கே புகுந்த பைக் ஆசாமியை பின் தொடர்ந்து பிடித்தனர். பிறகு பாதுகாப்பு பணியில் இருந்து உதவி ஆய்வாளர் முருகேசன் சம்பவம் குறித்து அபிராமபுரம் போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின்படி பிடிபட்ட வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, ஆதம்பாக்கம் மகாலட்சுமி நகர் 7வது கிராஸ் ஸ்ட்ரீட் பகுதியை சேர்ந்த இன்ஜினியர் அஜய்குமார்(28) என தெரியவந்தது.இவர் பிரபல ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வருவதும் தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் இன்ஜினியர் அஜய்குமாரை கடுமையாக எச்சரித்து அவருக்கு ரூ.500 அபராதம் விதித்து அனுப்பினர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் அபிராமபுரம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது