Others
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல்மருத்துவர்கள் தகவல்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் மற்றும் இருமல் பாதிப்பு இருப்பதாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினுக்கு கடந்த சில நாட்களாக உடல் சற்று சோர்வாக காணப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் இன்று மருத்துவமனையில் அனுமதிக்கபட்டார். மருத்துவர்கள் பரிசோதித்துப் பார்த்ததில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.இதுதொடர்பாக மெட்ராஸ் இஎன்டி ரிசர்ச் பவுண்டேசன் மருத்துமனை வெளியிட்ட அறிக்கையில், முதல்வர் ஸ்டாலின்காய்ச்சல்மற்றும்இருமல்அறிகுறிஇருந்ததால்நேற்றுமருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டார்.இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் வைரஸ் காய்ச்சலுக்கு சிகிச்சை எடுத்துக்கொள்ளவும், சில நாள்கள் ஓய்வெடுக்கவும் மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.