fbpx
GeneralRETamil NewsTrending Nowஅரசியல்இந்தியாஉலகம்தமிழ்நாடு

இந்தியாவில் ஊரடங்கைத் தளர்த்துவது மிகவும் ஆபத்தானது -உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை!!

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் முதல் 2 மாதங்களாக நாடு தழுவிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது.

4 கட்ட ஊரடங்கு முடிந்த பிறகு கடந்த ஜூன் 1-ம் தேதி முதல் Unlock 1 அதாவது தளர்வுகளுடன் ஊரடங்கு அமலில் உள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை ஊரடங்கின் போது கொரோனா பாசிட்டிவ் வழக்குகளின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே இருந்தது.

ஆனால் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டவுடன் மிகப்பெரிய அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அதிலும் கடந்த சில வாரங்களாக இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்து வருகிறது.

இதுவரை சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 6,000-த்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலை நீடித்தால் இந்தியாவுக்கு மிகப்பெரிய ஆபத்து என WHO-வின் அவசரக்கால திட்ட நிர்வாக இயக்குநர் மைக்கேல் ரியான் தெரிவித்துள்ளார்.

நேற்று ஜெனீவாவில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது கூறுகையில்,

“இந்தியாவில் இன்னும் கொரோனா வைரஸ் வெடிக்கவில்லை. ஆனால் இந்த நேரத்தில் ஊரடங்கைத் தளத்தினால் நாடு அபாயக் கட்டத்தை நோக்கி செல்லும்.

இந்தியாவில் தொற்றுநோய் பயணத்தின் திசை அதிவேகமாக இல்லை.

இந்த சமயத்தில் அது மெது மெதுவாக அதிகரித்து வருகிறது.

தொற்றுநோயின் தாக்கம் இந்தியாவின் நகர்ப்புறப் பகுதிக்கும் கிராமப்புறத்துக்கும் இடையில் வேறுபட்டு காணப்படுகிறது.

இந்தியா மட்டுமல்ல தெற்காசிய நாடுகளான வங்கதேசம், பாகிஸ்தான் போன்ற மக்கள் தொகை அதிகமாக உள்ள பல நாடுகளிலும் வைரஸ் சமூக பரவலாக வில்லை.

ஆனால் இது எப்போது வேண்டுமானாலும் சமூக பரவலாக வெடிக்கலாம். அதனால், பெரும் ஆபத்து இந்தியாவிற்கு ஏற்படும்.

இந்தியாவில் எடுக்கப்பட்ட கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் வைரஸ் பரவலைக் குறைத்திருந்தன.

ஆனால் மற்ற பெரிய நாடுகளைப் போலவே இந்தியாவும் ஊரடங்கைத் தளர்த்தி மக்களை வெளியில் செல்ல அனுமதிக்கையில், அங்கு மீண்டும் அபாயம் ஏற்படுவதற்கான வாய்ப்பு மிக அதிகமாக உள்ளது.

ஆகவே ஊரடங்கைத் தளர்த்தினாலும் வைரஸ் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மக்களால் பின்பற்றப்படுவதை கடுமையான கட்டளைகள் மூலம் உறுதி செய்ய வேண்டும் என எச்சரித்துள்ளார்

Related Articles

Back to top button
Close
Close