fbpx
Others

மத்திய அரசு–இந்தியாவில் 89,441 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது…..?

இந்தியாவில் மொத்தம் 89,441 அரசு பள்ளிகள் மூடல்.. அப்போ தமிழ்நாட்டின் நிலை  என்ன..? - Sathiyam TVகடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 89,441 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக மத்திய அரசு புள்ளி விவரத்தை வெளியிட்டுள்ளது.  தமிழ்நாட்டில் அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்குச் சத்துணவு திட்டம், இலவச பஸ் பாஸ், சீருடை, புத்தகம், புத்தகப் பை, சைக்கிள், லேப்டாப், கல்வி உதவித்தொகை உள்ளிட்ட ஏராளமான திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல் அரசுப் பள்ளியில் படித்து முடித்து கல்லூரி செல்லும் மாணவர்களுக்குப் புதுமைப் பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.இதன் காரணமாகத் தமிழ்நாட்டில் நடப்பாண்டில் மட்டும் 1 முதல் 8ஆம் வகுப்பு வரை சுமார் 3 லட்சம் மாணவர்கள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் நாடு முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் மூடப்பட்ட அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அந்த பட்டியலில் பாஜக ஆட்சியில் உள்ள மத்தியப் பிரதேச மாநிலம் முதலிடத்தை இருக்கிறது. 2014 முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் மட்டும் மத்தியப் பிரதேச மாநிலத்தில் 29,410 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. இந்தப் பட்டியலில் 2வது இடத்தில் உத்தரப் பிரதேச மாநில இருக்கிறது. கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 25,126 அரசுப் பள்ளிகள்பள்ளிகளில் நாளை முதல்... பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவு! - Dinasuvadu மூடப்பட்டிருக்கின்றன. அதேபோல் நாட்டிலேயே அதிக அரசுப்பள்ளிகள்இருக்கும்மாநிலமும்உத்தரபிரதேசம்தான். தொடர்ந்து பட்டியலில் ஒடிசா, அசாம், ஜார்க்கண்ட், காஷ்மீர் மற்றும் பீகார் உள்ளிட்ட மாநிலங்கள் இருக்கின்றன. ஒடிசாவில் 10,026 பள்ளிகளும், அசாமில் 7,919 அரசுப் பள்ளிகளும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் 5,527 அரசுப் பள்ளிகளும், ஜாஷ்மீரில் 5,089 அரசுப் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன.இதன்பின்மகாராஷ்டிராவில்2,560அரசுப்பள்ளிகளும்,ஆந்திரப்பிரதேசத்தில்  1,666அரசுப்பள்ளிகளும்மூடப்பட்டிருக்கின்றன.தொடர்ந்து உத்தராகண்டில் 1,552 பள்ளிகளும், பஞ்சாப் மாநிலத்தில் 1,530 அரசுப் பள்ளிகளும் மூடப்பட்டிருக்கின்றன. இந்த பட்டியலில் தமிழ்நாடும் இடம்பெற்றுள்ளது. ஆனால் மாநிலங்களில் குறைந்த அளவிலான அரசுப் பள்ளிகள் மூடப்பட்டது தமிழ்நாட்டில் தான். கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 239 அரசுப் பள்ளிகள் மூடப்பட்டிருக்கின்றன. ஏனைய தென் மாநிலங்களில் கர்நாடகாவில் 1,180 அரசுப் பள்ளிகளும், தெலங்கானாவில் 754 அரசுப் பள்ளிகளும், கேரளாவில் 295 அரசுப் பள்ளிகளும், ஆந்திராவில் 1,666 அரசுப் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. பெற்றோர் தங்களின் குழந்தைகளைத் தனியார்ப் பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டும் என்று விரும்புவதால், அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. அதேபோல் அரசுப் பள்ளியின் தரமும் பெற்றோர் தனியார்ப் பள்ளியை நோக்கிச் செல்வதற்குக் காரணமாகப் பார்க்கப்படுகிறது.

Related Articles

Back to top button
Close
Close